வெள்ளத்தில் சிக்கி 5 ஐயப்ப பக்தர்கள் பலி
கோவை:கோவை மாவட்டம் உடுமலை திருமூர்த்தி மலை காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 5 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாகஅடித்துச் செல்லப்பட்டனர். 10 பேர் உயிர் தப்பினர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக மீண்டும் கன மழை பொழிந்து வருகிறது. வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த மண்டலம், அப்படியே அதே இடத்தில் நிலை கொண்டிருப்பதால், மழை தொடரும் எனவானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
இதன் காரணமாக தலைநகர் சென்னை முதல் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலும் மழை காரணமாகவெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இயல்பு நிலையும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. உடுமலையில், உள்ள திருமூர்த்தி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளித்தி ஐயப்ப பக்தர்கள் 15 பேர்நீரில் சிக்கினர். இதில், 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி மீண்டனர்.
ஆனால் ஏழுமலை, மணிகண்டன், மகேந்திரன், நந்தகுமார், சந்திரசேகரன் ஆகிய ஐந்து பக்தர்களும் நீரில்அடித்துச் செல்லப்பட்டு இறந்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியைச்சேர்ந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
விருத்தாச்சலம் பகுதியில் கொட்டிய பேய் மழையால், மணிமுத்தா ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் தரைப் பாலத்தை மூடியபடி தண்ணீர் ஓடிக் கொண்டுள்ளது. இதேபோல கோகி அணை நிரம்பியதால்அது திறக்கப்பட்டுள்ளது.
மணிமுத்தா ஆற்றங்கரையோரப் பகுதிகலில் குடிசைகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் அங்கு வசித்து வந்தவர்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், ராமநாதபுரம், கோவை, ஈரோடு, சேலம், மதுரை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின்பல்வேறு பகுதிகளிலும் நேற்று விட்டு விட்டு பலத்த மழை பெய்தது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழைபெய்யும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் எச்சரித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications