ஊட்டி: மலைப் பாதையில் மீண்டும் நிலச்சரிவு
ஊட்டி:நீலகிரி மலைப் பாதையில் தொடரும் மழை காரணமாக மீண்டும் நிலச்சரிவுஏற்பட்டுள்ளது. இதனால் நீலகிரி மாவட்டம், மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்துதுண்டிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வந்த கன மழை காரணமாக சமீபத்தில் ஊட்டி மலைப்பாதையில் நூற்றுக்கணக்கான இடத்தில் மண் சரிவும், நிலச்சரிவும் ஏற்பட்டது. பலஇடங்களில் பாறைகளும் உருண்டு விழுந்ததால், போக்குவரத்து கடுமையாகபாதிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தில் லாரி உருண்டு விழுந்ததில் ஒரு கிளீனர் பலியானார். மண் சரிவைசரி செய்யும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ரயில் பாதைகளும் பல இடங்களில்சேதமடைந்துள்ளதால் மலை ரயில் போக்குவரத்தும் கடுமையாகபாதிக்கப்பட்டுள்ளது.
ராணுவ உதவியுடன் சீரமைப்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் தற்போது மீண்டும்மழை பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் மண் சரிவு ஏற்பட ஆரம்பித்துள்ளது.குன்னூர் முதல் சில்வர் பாலம் வரையிலான பகுதிகளில் சில இடங்களில் மண் சரிவுஏற்பட்டுள்ளது.
புதுக்காடு என்ற இடத்தில் மண் சரிவு ஏற்பட்டதில் அந்தப் பாதையில் போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பர்லியாறு பகுதியிலும் 3 இடங்களில் புதிதாக மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட மண் சரிவைத் தொடர்ந்து கோத்தகிரி வழியாக போக்குவரத்துதிருப்பி விடப்பட்டது. தற்போது அந்தப் பாதையிலும் மண் சரிவு ஏற்படுள்ளதாககூறப்படுகிறது. இதன் காரணமாக அந்தப் பாதையில் போக்குவரத்து நெருக்கடிஏற்பட்டுள்ளது.
கோத்தகிரி பகுதியிலும் பெரிய அளவில் மண் சரிவு ஏற்பட்டால் நீலகிரி மாவட்டம்,பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் துண்டிக்கப்படும் சூழல் உருவாகும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications