பெரும் தாக்குதலுக்கு தயாராகும் இலங்கை
கொழும்பு:விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலைத் தீவிரப்படுத்தும் வகையில் பல்வேறு நாடுகளிலும் ஆயுதங்களைவாங்கிக் குவிப்பதற்காக இலங்கை அரசு தனது ராணுவ பட்ஜெட்டை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா, பிரான்ஸ், பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ராணுவத்துறை உயர்அதிகாரிகளின் கூட்டம் கொழும்பில் நடந்தது. இக்கூட்டத்தில், இலங்கை ராணுவ தலைமை தளபதி ஜி.டிபெரைராபேசுகையில், இலங்கையில் தீவிரவாதத்தை தடுக்க உலக நாடுகள், இலங்கைக்கு உதவ வேண்டும். இப்பிரச்சினையைத் தீர்க்க உலக நாடுகள் இலங்கைக்கு உதவ வேண்டும்.
இதற்காக ராணுவ பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு 45 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் விமானப்படை, கடற்படை மற்றும் பாதுகாப்புப் பிரிவை பலப்படுத்த வேண்டியதுஅவசியமாகியுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான் மட்டுமல்ல, பிற பகுதிகளிலும் உள்ள நாடுகளும் இலங்கைக்கு உதவிகளை வழங்கவேண்டும் என்றார் பெரைரா.
2007ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் பாதுகாப்புத் துறைக்கான ஒதுக்கீட்டை 28 சதவீதம் அதிகரிக்க இலங்கை அரசுதிட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வியாழக்கிழமை அதிபர் ராஜபக்ஷே இலங்கை நாடாளுமன்றத்தில் பேசுகையில், பாதுகாப்புத் துறைக்கானபட்ஜெட் உயர்வு குறித்து மறைமுகமாக குறிப்பிட்டார்.
அவரது பேச்சை வைத்துப் பார்க்கும்போது, 2006ல் ஒதுக்கியதை விட (108.67 பில்லியன்), வருகிற ஆண்டில்கூடுதலாக அதாவது 139.56 பில்லியன் ரூபாய் அளவுக்கு நிதி ஒதுக்கீடு இருக்கும் எனக் கூறப்படுகிறது.
மேலும், இலங்கை கடற்படையில் தற்போது இஸ்ரேல் நாட்டுத் தயாரிப்பான டிவோரா தாக்குதல் படகுகளைமாற்றி விட்டு நவீன படகுகளை சேர்க்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்கிடையே, ஜேன்ஸ் பாதுகாப்பு இதழின் இலங்கை செய்தியாளரான இக்பால் அதாஸ் கூறுகையில், இலங்கைஅரசு கடற்படை மற்றும் ராணுவத்திற்கு அதி நவீன ஆயுதங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளுடன் நடந்த தாக்குதலில் இலங்கை கடற்படை முக்கிய தாக்குதல் படகுகளை இழந்துவிட்டதால் புதியவற்றை வாங்க இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
கடந்த கால இலங்கை அரசுகளை விட தற்போதுள்ள ராஜபக்ஷே அரசு ஆயுதங்களை வாங்கிக் குவிப்பதில்தீவிரம் காட்டுவதாகவும் இக்பால் கூறுகிறார். இலங்கையில் கடந்த இரு முறை அமைந்த அரசுகளும் தாக்குதலைமட்டுப்படுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தன. ஆனால் ராஜபக்ஷே அரசு, அதிலிருந்துமாறுபட்டு தாக்குதலை தீவிரப்படுத்துகிறது என்கிறார் இக்பால்.
தமிழர் பகுதிகளில் ராணுவ ரீதியிலான தாக்குதலை பெரிதுபடுத்தவும், இதுவரை இல்லாத அளவுக்கு பெரும்தாக்குதலைத் தொடுக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டு வருவதையே இது காட்டுவதாக இக்பால் தெரிவிக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications