பிருத்வி ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை
பலசோர் (ஒரிசா):200 கிலேமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்கைத் தாக்கும் வல்லமை படைத்த பிருத்வி ஏவுகணைஒரிசா மாநிலத்தில் வெற்றிகரமாக ஏவி பரிசோதிக்கப்பட்டது.
பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம், முற்றிலும் இந்தியத் தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளதரையிலிருந்து தரையில் உள்ள இலக்கைத் தாக்கும் ஏவுகணையான பிருதி ஏற்கனவே பலமுறைபரிசோதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஒரிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில் பிருத்வி இன்றுமீண்டும் ஏவி பரிசோதிக்கப்பட்டது.
நடமாடும் ஏவுதளம் மூலம் பிருத்வி ஏவப்பட்டது. காலை 9.55 மணிக்கு நடந்த இந்த சோதனை வெற்றிஅடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
200 முதல் 250 கிலோமீட்டர் தொலைவிலான இலக்கைத் தாக்கக் கூடியது பிருத்வி. இந்த ஏவுகணை 700 கிலோஎடையுள்ள வெடிபொருட்களை கொண்டு செல்லக் கூடியது. இதை 1000 கிலோவாக அதிகரிக்கக் கூடியவசதிகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications