சபரிமலை கோவில் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ்
சபரிமலை:கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் ரூ.30 கோடிக்கு இன்சூரன்ஸ்செய்யப்பட்டுள்ளது.
உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலை ரூ.30 கோடிக்கு திருவிதாங்கூர்தேவஸ்தான வாரியம் இன்சூரன்ஸ் செய்துள்ளது. மேலும், ஐயப்ப பக்தர்களுக்குஇலவச விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தையும் தேவஸ்தான வாரியம்அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான ஒப்பந்தம் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கும்,தேவஸ்தான வாரியத்திற்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது. இத்திட்டத்தின்படிஐயப்பன் கோவிலில் உள்ள தங்க மேல் கூரை இன்சூர் செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கோவில் நகைகள், விலை உயர்ந்த பொருட்களும் இன்சூர்செய்யப்பட்டுள்ளன. இவை ரூ. 5 கோடிக்கு இன்சூர் செய்யப்பட்டுள்ளது.தேவஸ்தான நிர்வாக கட்டடம் ரூ. 1 கோடிக்கு இன்சூர் எடுக்கப்பட்டுள்ளது.
ஐயப்ப பக்தர்களுக்கான விபத்தக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிலக்கல்பகுதியிலருந்து சன்னிதானம் வரையிலான 18 கிலோமீட்டர் தொலைவிலானபாதையில் வரும் பயணிகளுக்கு விபத்தினால் காயம் அல்லது உயிர்ச் சேதம்ஏற்பட்டால் அவர்களுக்கு ரூ.1 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும்.
இதேபோல சபரிமலையில், பணியில் ஈடுபட்டிருக்கும் தேவஸ்தான மற்றும் அரசுஊழியர்கள் இறக்க நேரிட்டால் அவர்களது குடும்பத்துக்கு ரூ. 1.5 லட்சம் காப்பீட்டுத்தொகையாக கிடைக்கும்.
இந்த விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் ரூ. 14.75 லட்சத்தைபிரீமியமாக வழங்கியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications