சந்தைக்கு வந்த லாலு குதிரை!
பாட்னா:ரயில்வே அமைச்சர் லாலுவின் குதிரையான பவன் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால் ரேட் அதிகமாகஇருப்பதால் இதுவரை குதிரை போணியாகாமல் உள்ளதாம்.
லாலு என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது அவரது வீட்டுப் பண்ணையும், அதில் வளர்ந்து வந்த ஆடு, மாடு,குதிரை போன்ற கால்நடைகளும்தான். அந்த அளவுக்கு கால்நடைப் பிரியர் லாலு. அத்தோடு தனது குலத்தொழிலாளான கால்நடை வளர்ப்பை அவர் பெரிதும் மதிப்பவர்.
லாலு முதல்வராக இருந்தபோதும், பின்னர் அவரது மனைவி ராப்ரி முதல்வராக இருந்தபோதும் அவர்களதுஅரசு வீட்டை அலங்கரித்தது கால்நடைகள்தான். ஏகப்பட்ட ஆடு, மாடுகளை அவர்கள் வளர்த்து வந்தனர்.
இப்போது இருவருமே முதல்வர் பதவியில் இல்லாததால் அரசு வீட்டைக் காலி செய்ய வேண்டியதாகி விட்டது.இதனால் இதுவரை வளர்த்து வந்த ஆடு, மாடுகளை எங்கு வைத்த வளர்ப்பது என்பது தெரியாததால், அவற்றைவிற்று விட்டனர்.
இப்போது லாலு வசம் இருப்பது அவரது ஜட்கா (குதிரை வண்டி) பயணத்தின்போது பயன்படுத்தப்பட்ட குதிரைபவன் மட்டுமே. இப்போது அந்தக் குதிரையையும் தள்ளி விட்டு விட லாலு முடிவு செய்துள்ளார். பவன்,சோனோபூர் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலையை ரூ. 1.51 லட்சமாக லாலு நிர்ணயித்துள்ளார்(ஆத்தாடியோவ்!)
லாலு குதிரை என்பதால் ஏகப்பட்ட மக்கள் அதைப் பார்க்க அலை மோதுகின்றனராம். லோக்கல் மக்கள்மட்டுமல்லாது இங்கிலாந்து, பிரான்ஸ், ஹாலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் லாலுவின் பவன்கவர்ந்து விட்டான்.
சந்தைக்கு விற்பனைக்கு வந்து விட்டபோதிலும் ரேட் ஜாஸ்தியாக இருப்பதால் இதுவரை குதிரைபோணியாகாமல் கொள்ளை அசை போட்டபடி புதிய லாலுவுக்காக காத்திருக்கிறதாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications