இலங்கையின் யாழ்பாண சாலை அரசியல்
கொழும்பு:உலக நாடுகளின் நெருக்குதலைத் தொடர்ந்து யாழ்பாணம் நெடுஞ்சாலை ஏ-9யைத்தாற்காலிகமாகத் திறக்க இலங்கை அரசு முன் வந்துள்ளது. உணவுப் பொருட்களுடன்ஒரே ஒரு முறை லாரிகளை அனுப்பிவிட்டு மீண்டும் சாலையை மூடப் போவதாகஅறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை புலிகள் ஏற்க மறுத்துள்ளனர். சாலையை நிரந்தமாக திறக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இலங்கையின் வடக்கு-தெற்குப் பகுதிகளை இணைக்கும் இந்தச் சாலையை கடந்தஆகஸ்ட் 11ம் தேதி மூட உத்தரவிட்டார் அதிபர் ராஜபக்ஷே. இதனால் தமிழர்பகுதிகளுக்கு உணவு, மருந்துகள் செல்வதை தடுத்தார்.
ராஜபக்ஷேவின் இந்த கொடூரப் போக்கினால் யாழ்ப்பாணம் தமிழர்கள் பெரும்உணவுப் பொருள் தட்டுப்பாட்டிலும் பட்டினியிலும் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர்.அங்கு பட்டினிச் சாவுகளும் அங்கு நடந்து வருகின்றன.
ஆனால், அரசுத் தரப்பில் ஒரே ஒரு தமிழரின் பட்டினிச் சாவுதான் அதிகாரப்பூர்வமாகஅறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த சாலையைதிறக்குமாறு விடுதலைப் புலிகள் வைத்த கோரிக்கையை இலங்கை நிராகரித்ததால்பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
இந் நிலையில் தமிழர்களை பட்டினி போட்டு சாகடிக்கும் இலங்கைக்கு எதிராகதமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன.
இதையடுத்து இந்தியா லேசாக அசைந்து கொடுத்துள்ளது. இலங்கைக்கு உணவு,மருந்துகளை அனுப்புவதாக பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார்.
சாலையைத் திறக்குமாறு உலக நாடுகள் நெருக்குதல் தந்ததையடுத்து யாழ்ப்பாணம்நெடுஞ்சாலையை திறக்க இலங்கை முன் வந்துள்ளது. ஆனால், இது தாற்காலிகமானதுஎன இலங்கை அரசு அறிவித்துள்ளது.
லாரிகள் மூலம் உணவு, மருந்துகளை அனுப்பிவிட்டு மீண்டும் சாலை மூடப்படும் எனஅரசு அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தை ஏற்க புலிகள் மறுத்துள்ளனர். சாலையை நிரந்தரமாக திறக்கவேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கிடையே சாலையை திறக்க ராணுவம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாகவும் ஒருதகவல் வருகிறது.
இலங்கை நாடகம்:
இத்தனை மாதங்களாக இல்லாமல் திடீரென சாலையை திறப்பதாகவும் உணவுஅனுப்புவதாகவும் இலங்கை அரசு இப்போது அறிவித்துள்ளதற்கு முக்கிய காரணம்இன்று நார்வே, ஜப்பான், ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகிய இலங்கைக்குநிதியுதவி செய்யும் நாடுகளின் கூட்டம் நடக்கவுள்ளது.
இந்த நாடுகள் யாழ்பாண சாலையை திறக்குமாறு கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மீனை சுட்டு சாப்பிடும் பரிதாபம்:
இலங்கை அரசின் உணவு தடையால் மட்டக்களப்பில் உள்ள வாகரைப் பகுதியில்பஞ்சத்தால் பரிதவிக்கும் தமிழ்க் குழந்தைகள், பசியைப் போக்க மீன்களைப் பிடித்துசுட்டு சாப்பிட்டு வருகின்றனர்.
இப் பகுதியில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பட்டினியால் சாகும் அபாயகரமானசூழ்நிலை நிலவுகிறது.
குறிப்பாக வாகரைப் பகுதியில்தான் பஞ்சம் அதிக அளவில் உள்ளது. உணவுப்பொருட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது. இதனால் இங்குள்ளவர்கள்ஆங்காங்கே குளம், குட்டைகளில் உள்ள மீன்களைப் பிடித்து அவற்றை சுத்தம்செய்யக் கூட முடியாமல், அப்படியே நெருப்பில் வாட்டி சாப்பிட்டு பசியைப் போக்கிவருகின்றனர்.
இந்த அசுத்தமான மீன்களை சிறு குழந்தைகளும் சாப்பிட்டாக வேண்டிய அவலம்நிலவுகிறது. இதுகுறித்து தமிழர் சீரமைப்புக் கழக ஒருங்கிணைப்பாளர் மூர்த்திகூறுகையில்,
சிறு குளங்களில் உள்ள மீன்கள், நண்டுகள், இறால்களைப் பிடித்து அவற்றைநெருப்பில் வைத்து சுட்டு அதை சாப்பிடுகின்றனர் குழந்தைகள். வெறும் மீனைஅப்படியே சுட்ட சாப்பிடுவது உடலுக்கு பெரும் தீங்கானது. ஆனால் வேறுவழியில்லாததால் இதை சாப்பிட வேண்டிய அவலம் நிலவுகிறது. தங்களதுகுழந்தைகள் இப்படி அவதிப்படுவதைப் பார்த்து அவர்களது பெற்றோர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
உணவுப் பொருட்களுக்கு பெரும்பஞ்சம் நிலவுவதால் விதைப்பதற்காக விவசாயிகள்இருப்பு வைத்திருந்த விதை நெல்லையும் கூட இப்போது விற்பனைக்குக் கொண்டுவந்து விட்டனர். வட கிழக்குப் பருவ மழை விரைவில் தொடங்கவுள்ளது.
இந் நிலையில் சுகாதார கவலைகளும் தற்போது தமிழர்கள் மத்தியில்அதிகரித்துள்ளன. மழைக்காலம் வந்தால் பல்வேறு நோய்களும் பரவும் அபாயம்அதிகரித்துள்ளது. அவற்றை சமாளிக்கத் தேவையான மருந்துகளும் கையிருப்பில்இல்லை என்பது பெரும் கவலையைத் தருகிறது.
வாகரைப் பகுதியில் எப்போதும் பெரு வெள்ளம் தாக்கும். சர்வ சாதாரணாக தண்ணீர்சம்பந்தப்பட்ட நோய்களும் பரவும். இப்பகுதியில் வசிப்பவர்கள் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்பதால் நிலைமையை எப்படி சமாளிப்பது என்றபெரும் கேள்விக்குறி எழுந்துள்ளது.
இப்பகுதியில் வீடிழந்த தமிழர்கள் அதிக அளவில் அகதிகளாக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியில் வெள்ளம் சூழ்ந்தால் பெரும் உயிர்ச் சேதம்ஏற்படும் அபாயம் உள்ளது. இப்பகுதியில் ஒரே ஒரு அரசு மருத்துவமனைதான்உள்ளது. ஆனால் அங்கும் கூட மருந்துகள் போதிய அளவில் இல்லை.
இங்கிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ராணுவம் வசம் உள்ள பகுதிகளுக்குச் சென்றால்அவர்களை ராணுவம் மருத்துவமனைக்குள் அனுமதிப்பதில்லை. இதனாலும்தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த செப்டம்பர் செஞ்சோலை குண்டு வீச்சில் படுகாயமடைந்த ஒரு வயதுகுழந்தையை சிகிச்சைக்காக ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைக்குஎடுத்துச் சென்றபோது அக்குழந்தைக்கு சிகிச்சை அளிக்க ராணுவம் மறுத்து விட்டது.இதையடுத்த வாகரையில் உள்ள மருத்துவனையில் குறைந்த மருத்துவ வசதிகளுடன்அந்தக் குழந்தைக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது.
ஆனால் உடலில் பாய்ந்த இரண்டு குண்டுகளில் ஒன்றைத்தான் எடுக்க முடிந்தது.இன்னும் ஒரு குண்டு குழந்தையின் உடலிலேயே உள்ளது.
இதேபோல, கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு உதிரப் போக்கு ஏற்பட்டது. இதையடுத்துவெளிச்சேனை மருத்துவமனைக்கு அவரை கொண்டு செல்ல வாகரை மருத்துவமனைடாக்டர் அறிவுறுத்தினார். அங்கு அவரைக் கொண்டு சென்றபோது, ராணுவம் அதற்குஅனுமதி அளிக்க மறுத்து விட்டது.
இதனால் மீண்டும் வாகரைக்கே அவர் கொண்டு வரப்பட்டார். அங்கு அவரதுவயிற்றில் இருந்த குழந்தையை மட்டுமே காப்பாற்ற முடிந்தது. குழந்தைபிறந்தவுடனேயே அந்தப் பெண் பரிதாபமாக இறந்து விட்டார் என்றார் மூர்த்தி.
புதிய விமான நிலையம்: இதற்கிடையே, இலங்கையின் தெற்கே புதிய சர்வதேசவிமான நிலையம் அமைப்பதற்கு அதிபர் ராஜபக்ஷே அடிக்கல் நாட்டியுள்ளார்.
ராஜபக்ஷே அதிபர் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு முடிவடைந்துள்ளது. இதையொட்டிபல்வேறு நிகழ்ச்சிகளுக்கு கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் ஒருபகுதியாக, பல கோடி மதிப்பில் தெற்கு மாகாணத்தில், வீரவேலா என்ற இடத்தில்கட்டப்படவுள்ள புதிய சர்வதேச விமான நிலையத்திற்கு ராஜபக்ஷே அடிக்கல்நாட்டினார்.
1,150 ஹெக்டேர் பரப்பளவில் 1.2 பில்லியன் ரூபாய் மதிப்பில் இந்த விமானநிலையம் கட்டப்படவுள்ளது. 2009ம் ஆண்டுக்குள் இதை கட்டி முடிக்கதிட்டமிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 10 விமானங்களை இங்கு தரையிறக்கமுடியும். அனைத்து நவீன வசதிகளுடனும் கூடியதாக இந்த விமான நலையம்உருவாகவுள்ளது.
தற்போது இலங்கையில் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையம்தான் உள்ளது.கொழும்பில் உள்ள காட்டுநாயகே விமான நிலையம்தான் அது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications