நான் போராடினால் நாடு குலுங்கும்: விஜயகாந்த்
சென்னை:எல்லாப் போராட்டங்களிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். அதேசமயம், போராட்டத்தில் கலந்து கொள்ளநான் முடிவெடுத்தால் அந்தப் போராட்டத்தால் தமிழ்நாடே குலுங்கிப் போகும் அளவுக்கு பிரமாண்டமானதாகஇருக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விஜயகாந்த் முன்னிலையில் தேமுதிகவில் இணையும் விழா சென்னைகோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் கல்யாண மண்டபத்தில் நடந்தது.
இதில் கலந்து கொண்டு விஜயகாந்த் பேசுகையில், தேமுதிகவினர் மீது பொய் வழக்குப் போட்டு கட்சியைஅழித்து விடலாம் என சிலர் கனவு காண்கின்றனர். கோவை மாவட்ட நிர்வாகி பொன்னுச்சாமி மீது பொய்வழக்குப் போட்டுள்ளனர்.
இந்தக் கல்யாண மண்டபத்தில்தான் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, திமுகவினர் உள்பட லட்சக்கணக்கானோர்தேமுதிகவில் இணைந்து வருகின்றனர். இதைப் பொறுக்க முடியாமல்தான் இதை இடித்து விட துடிக்கிறார்கள்.
கல்யாண மண்டபத்தை இடித்து விட்டால் கட்சியை அழித்து விடலாம் என்பது அவர்களது கணக்கு. ஆனால்கட்சியும் அழியாது, நானும் கலங்கிப் போய் விட மாட்டேன்.
ரவுடிகளையெல்லாம் சிறையிலிருந்து திறந்து வெளியே விட்டு விட்டு இப்போது அவர்களை சுட்டுக் கொன்றுவருகிறார்கள்.
அனைத்துக் கட்சிகளிலும் போராட்டங்களை நடத்துவது குறித்து கேட்கிறார்கள். நான் அப்படி அல்ல, எல்லாப்போராட்டங்களிலும் நான் கலந்து கொள்ள மாட்டேன். அப்படி நான் கலந்து கொள்ளும் போராட்டம்
என்றால் அப்போராட்டத்தால் தமிழ்நாடே குலுங்கிப் போய் விடும். அப்படி ஒரு போராட்டத்தைதான் நான்நடத்துவேன் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications