குண்டு புரளி: சிக்கிய 6 வயது சிறுமி, சிறுவன்!!!
சென்னை:சென்னை பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அதுவெடித்துச் சிதறப் போவதாகவும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த 2வது வகுப்பு படிக்கும் 6 வயது மாணவியும்,5வது வகுப்பு படிக்கும் அச்சிறுமியின் 10 வயது அண்ணனும் போலீசாரிடம் மாட்டினர்.
சென்னை நகரில் வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சர்வ சாதாரணமாகி வருகிறது.தீவிரவாதிகளை விட விளையாட்டுக்காக மிரட்டல் விடுப்போர்தான் அதிகரித்துவருகின்றனர். இதனால் போலீஸாருக்கு பெரும் தலைவலியாக உள்ளது.
சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விமானத்துக்கு வெடிகுண்டுமிரட்டல் விடுக்கப்பட்டபோது, சென்னை காவல்துறை கலங்கிப் போனது.விமானத்தையும், விமான நிலையத்தையும் பாதுகாப்பு அதிகாரிகள் சல்லடை போட்டுதேடுதல் வேட்டை நடத்தியதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த மிரட்டல் தொடர்பாக நகைக் கடை ஊழியர் ஒருவர் சிக்கினார்.விளையாட்டுக்காக இப்படிச் செய்தேன் என அந்த நபர் பின்னர் கூறியபோதுபோலீஸார் வெறுத்துப் போய் விட்டனர். அவர் மீது தற்போது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் பள்ளிக்கூடம் ஒன்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக 6 மற்றும்10 வயது சிறுவர்கள் சிக்கியுள்ளனர். இது காவல்துறைக்கு பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதியான பொழிச்சலூரில் உள்ள தனியார் பள்ளிக் கூடத்தில்வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கப்போவதாகவும் போலீஸாருக்கு தொலைபேசி தகவல் வந்தது.
இதையடுத்து தங்களுக்கு வந்த தொலைபேசி எண்ணைப் பார்த்த போலீஸார் அது ஒருசெல்போன் என கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த எண்ணுக்குரிய முகவரிக்குஅவர்கள் விரைந்தனர். வீட்டுக்குப் போய் யார் போன் செய்தது என்று விசாரித்தபோதுஅவர்களுக்கு அங்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் போன் செய்தவர்கள் இரண்டு பேரும் சிறுவர், சிறுமி என்பதுதான். இருவரும் பொழிச்சலூர் அருகேஉள்ள பம்மல் என்ற இடத்தில் நர்சரி பள்ளியில் படித்து வருகின்றனர். 6 வயதாகும் கெளரி சங்கரி 2வதுவகுப்பும், 10 வயதாகும் ராஜன் 5 வது வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் அண்ணன், தங்கை ஆவர்.
இவர்களது தந்தை வீட்டில் வைத்து விட்டுப் போன செல்போனை எடுத்து கட்டுப்பாட்டு அறைக்குப் போன்செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது விசாரணையில் தெரிய வந்து போலீஸார் பெரும் அதிர்ச்சியுற்றனர்.சமீபத்தில் சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ஆந்திராவைச் சேர்ந்த கிரண் என்ற இளைஞர் வெடிகுண்டு மிரட்டல்விடுத்த செய்தியை டிவியில் இருவரும் பார்த்துள்ளனர்.
நாமும் இதேபோல செய்து பார்க்கலாம் என நினைத்து இருவரும் குரலை சீரியஸாக வைத்துக் கொண்டு மிரட்டல்விடுத்துள்ளனர் என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. போலீஸாரைப் பார்த்ததும் இரு குட்டீஸ்களும்ஓவென்று கதறி அழ ஆரம்பித்து விட்டனர்.
என்ன ஏது என்று புரியாமல் குழந்தைகளின் பெற்றோர் தவிக்கவே, போலீஸாரிடம்நடந்ததைக் கூறியுள்ளனர் சிறுவனும் சிறுமியும்.
இதைக் கேட்டு பெற்றோரும் அதிர்ச்சி அடைந்தனர். இருவரையும் கடுமையாகஎச்சரித்த போலீஸார், அவர்களது பெற்றோரிடம், இதுபோல குழந்தைகள் கையில்போன்களைக் கொடுக்கக் கூடாது, அவர்கள் மீது கவனமாக இருக்க வேண்டும் என்றுஏகப்பட்ட அறிவுரைகளை கூறிவிட்டுச் சென்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications