இந்தியா-சீனா 13 ஒப்பந்தங்கள் கையெழுத்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி:சிவில் அணு சக்தி ஒப்பந்தம், வர்த்தகம் உள்ளிட்ட 13 ஒப்பந்தங்களில் இந்தியாவும்,சீனாவும் கையெழுத்திட்டுள்ளன.

சீன அதிபர் ஹூ ஜின்டோ நான்கு நாள் பயணமாக நேற்றிரவு டெல்லி வந்தார். கடந்தபத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு வருகை தரும் முதல் சீன அதிபர் ஹூ என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்திய, சீன நட்புறவு ஆண்டாக இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஹூவின் இந்திய வருகை இரு நாட்டு உறவுகளையும் மேலும்வலுப்படுத்தும் என இரு நாட்டு அரசுகளாலும் நம்பப்படுகிறது.

டெல்லி வந்த ஹூவை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப்முகர்ஜி வரவேற்றார். இன்று ஹூவுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில்அரசு ரீதியான பாரம்பரிய வரவேற்பு தரப்பட்டது.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் ஹூவைவரவேற்றனர். பின்னர் பிரதமர் மன்மோகன் சிங்கும், ஹூவும் ஹைதராபாத்இல்லத்தில் சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே 13 முக்கிய ஒப்பந்தங்கள்கையெழுத்தாகின. இச்சந்திப்புக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்துசெய்தியாளர்களை சந்தித்து கூட்டறிக்கையை வெளியிட்டனர்.

இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள ஒப்பந்தங்களின் சாராம்சம்: இந்தியாவும்,சீனா இடையிலான ஒத்துழைப்பை அதிகரிக்க 10 அம்சத் திட்டம் ஒன்றை இருநாடுகளும் பரிந்துரைத்துள்ளன. மேலும் 2010ம் ஆண்டுக்குள் இரு நாடுகளுக்கும்இடையிலான வர்த்தகத்தை 40 பில்லியன் டாலராக உயர்த்தவும் உடன்பாடுகாணப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கூறுகையில்,

இந்திய, சீன உறவுகளை மேலும் வலுப்படுத்த தேவையான ஆக்கப்பூர்வமானநடவடிக்கைகளில் ஈடுபட இரு நாடுகளும் ஒத்துக் கொண்டுள்ளன. இருநாடுகளுக்கும் இடையே அடிக்கடி அதிகாரிகள் மட்டத்திலான கூட்டங்களைநடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பிரச்சினையை சுமூகமாக தீர்க்க சிறப்புப் பிரதிநிதிகளை நியமிக்கவும்ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. சீன அதிபருடனான சந்திப்பு இதயப்பூர்வமாகவும்,ஆக்கப்பூர்வமாகவும் அமைந்திருந்தது என்றார் சிங்.

ஹூ பேசுகையில், சீனாவும், இந்தியாவும் உலக அளவில் முக்கியமான வளரும்நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு உலக அளவில் முக்கியத்துவம்வாய்ந்தது. வர்த்தகம், மின்சாரம், விவசாயம், முதலீடுகள், மனித வள ஆற்றல் ஆகியதுறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.

கொல்கத்தாவில் புதிய சீன துணைத் தூதரகத்தையும், அதேபோல குவாங்காங் நகரில்புதிய இந்தியத் துணைத் தூதரகத்தையும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங்குடன் நடத்திய இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சிறப்பான திசையில் செல்வதை உணர முடிந்தது.இரு நாடுகளுக்கும் இடையே நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்சினைக்குவிரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது, இரு நாடுகளின் வளர்ச்சிக்கும் மிகமுக்கியமானது.

அதுவரை எல்லைப் பகுதியில் அமைதி நிலவும் வகையில் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவைச் சேர்ந்த 500இளைஞர்கள் சீனாவுக்கு வரவழைக்கப்படுவர். இந்தப் பேச்சுவார்த்தைஇதயப்பூர்வாகவும், ஆழமானதாகவும் அமைந்திருந்தது என்றார் ஹூ.

முன்னதாக ஹூவின் வருகையையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய சீனாவுக்கானஇந்தியத் தூதர் அருணாச்சல் பிரதேசம் சீனாவுக்கே சொந்தமானது என்று சமீபத்தில்கருத்து தெரிவித்திருந்தார். இதன்மூலம சீனா தனது மனதில் உள்ளதைதெளிவாக்கிவிட்டது.

ஆனால், இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை பிரதமர் மன்மோகன் வாயேதிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது இந்திய பயணத்தின்போது ஆக்ரா, மும்பை ஆகிய ஊர்களுக்கும் ஹூசெல்கிறார். மேலும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்அத்வானி ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். தனது இந்திய பயணத்தின்முடிவில் 23ம் தேதி ஹூ பாகிஸ்தான் செல்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+