செங்ஸ் ஊழல் வழக்கு: அரசின் அப்பீல் தள்ளுபடி

Subscribe to Oneindia Tamil

சென்னை:ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்உள்ளிட்டோர் மீது சென்னை தனி நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை ரத்து செய்துசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசுதாக்கல்செய்த அப்பீல் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா முதல் முறை முதல்வர் பதவியை வகித்தபோது அவரதுஅமைச்சரவையில் போக்குவரத்து அமைச்சராக இருந்தவர் செங்கோட்டையன். அந்தசமயத்தில் ஜீவா போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனராக வீரப்பன் இருந்தார்.

இவர்கள் மீதும் நடராஜன் என்கிற ஏஜென்டு மீதும் கடந்த திமுக ஆட்சியில், ஊழல்வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை 3வது தனி நீதிமன்றம்,கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி, செங்கோட்டையனுக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ. 1.50 லட்சம் அபராதம், வீரப்பனுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.95,000 அபராதம், நடராஜனுக்கு ரூ. 95,000 அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்தனர். மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் தனி நீதிமன்றத்தின் தண்டனையைரத்து செய்து 3 பேரையும் விடுதலை செய்தது.

இந் நிலையில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தற்போதைய திமுக ஆட்சியில்உச்சநீதமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள்எஸ்.பி.சின்ஹா, மார்க்கண்டேய கட்ஜூ ஆகியோர் முன்னிலையில் பரிசீலனைக்குவந்தது.

மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள் தமிழக அரசின் அப்பீல் மனுவைத் தள்ளுபடிசெய்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான 90நாட்களுக்குள் மேல் முறையீடு செய்ய வேண்டும். ஆனால் இந்த வழக்கில் அப்படிநடக்கவில்லை. மிக மிக தாமதமாக இந்த அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உங்களது அரசியல் சண்டைகளை இங்கே வைத்துக் கொள்ள நினைக்காதீர்கள்.தேர்தல்கள் மூலமாக அவற்றைத் தீர்த்துக் கொள்ளுங்கள் என்றனர்.

2000ம் ஆண்டு உயர்நீதிமன்றம் செங்கோட்டையன் உள்ளிட்டவர்களை விடுதலைசெய்து உத்தரவிட்ட தீர்ப்பை எதிர்த்து 2001ல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு மேல்முறையீடு செய்யவில்லை. ஆனால் தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தவுடன்அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாஜி முத்துச்சாமி மீதான வழக்கு தள்ளுபடி:

இதற்கிடையே முன்னாள் அதிமுக அமைச்சர் முத்துச்சாமியின் சொத்து முடக்கத்தை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை சென்னைஉயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை நடந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் முத்துச்சாமி.தற்போது அதிமுகவில் அவர் ஓரம்கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்.

1996ம் ஆண்டு முத்துச்சாமி மீது அப்போதைய திமுக அரசு ஊழல் வழக்கு பதிவு செய்தது. இதைத் தொடர்ந்து முத்துச்சாமி மற்றும் அவரது குடும்பத்தினரின்சொத்துக்களை முடக்க சென்னை சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த முடக்கத்தை ரத்து செய்யக் கோரி முத்துச்சாமி சிறு வழக்குகள் நீதிமன்றத்தை அணுகினார். சொத்துக்களுக்கு முறயான கணக்குகள் இருப்பதாகமுத்துச்சாமி காட்டிய ஆதாரங்களைப் பரிசீலித்த சிறு வழக்குகள் நீதிமன்றம் கடந்த 1997ம் ஆண்டு சொத்து முடக்கத்தை ரத்து செய்தது.

இதை எதிர்த்து திமுக அரசு உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது. இந்த மேல் முறையீட்டு மனு நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது.

இந் நிலையில் இம்மனு நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,

இந்த வழக்கை தாங்கள் தொடர்ந்து வற்புறுத்த விரும்பவில்லை என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிஉத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+