கருணாநிதியின் சூர்யா கவலை: ஜெ பாய்ச்சல்
சென்னை:தனது குடும்பத்துக்குச் சொந்தமான மலையாள தொலைக்காட்சிகளான சூர்யா, கிரண்ஆகிய சானல்களின் வர்த்தக வருவாய் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்ற நோக்கில்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் முதல்வர் கருணாநிதி சுயநலத்தோடுசெயல்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையின்உயரத்தை 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படிஇருந்தும் அணையில் 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க நடவடிக்கைஎடுக்காமல் கருணாநிதி தலைமையிலான திமுக மைனாரிட்டி அரசு அமைதி காத்துவருகிறது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, அணையின் மதகுகளை இறக்கி ஏன் தண்ணீரைத் தேக்கிவைக்க கருணாநிதி நடவடிக்கை எடுக்கக் கூடாது? திமுக அரசின் இந்த மெத்தனப்போக்கினால், நன்கு மழை பெய்து வரும் நிலையிலும், தண்ணீரைத் தேக்கமுடியாமல், வீணாக கடலில் போய் கலந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட தமிழக பொதுப்பணித்துறைஅணைச்சர் துரைமுருகன் சென்றபோது, அச்சுதானந்தன் (கேரள முதல்வர்)தூண்டுதலின் பேரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அவரை அவமதித்துகோஷமிட்டு போராட்டம் நடத்தினர். இந்த சம்பவத்தைக் கண்டிக்கக் கூட சிறுபான்மைதிமுக அரசு முன் வராதது வெட்கக்கேடானது.
முல்லைப் பெரியாறு விவகாரத்தில் 5 தென் மாவட்ட விவசாயிகளின் நலனை மனதில்கொள்ளாமல் கருணாநிதி செயல்படுகிறார். இந்த விஷயத்தில் தனது பேரன் கலாநிதிமாறனுக்குச் சொந்தமான மலையாள டிவி சேனல்களான சூர்யா, கிரண் ஆகியவற்றின்வர்த்தக வருவாய்க்குப் பாதிப்பு ஏற்பட்டு விடக் கூடாது என்ற கவலைதான் அவருக்குபெரிதாக உள்ளது.
அதேபோல, கம்யூனிஸ்டுகளின் ஆதரவும் தனது சிறுபான்மை அரசுக்குத் தேவைஎன்பதால் இடது சாரிகளைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக கேரள அரசைஎதிர்த்துக் குரல் கொடுக்காமல் மெளனம் சாதித்து வருகிறார்.
இதே போன்ற நெருக்கடியில்தான் மத்திய அரசும் உள்ளது. இடது சாரிகளின் ஆதரவுஇல்லாமல் ஒரு மணி நேரம் கூட மத்திய அரசால் பதவியில் நீடிக்க முடியாது. எனவேகேரள அரசுக்கு பிரதமர் மன்மோகன் சிங் எந்த உத்தரவையும் பிறப்பிக்க மாட்டார்.
ஏற்கனவே காங்கிரஸ் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தபோதே, காவிரிப்பிரச்சினையில் இவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை, செய்யவும் இல்லை.
இந் நிலையில், திருவனந்தபுரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டிய கேரளமுதல்வர் அச்சுதானந்தன், அந்தக் கூட்டத்தில் முல்லைப் பெரியாறில் 142 அடிக்குதண்ணீரை தேக்கி வைக்க முடியாது என்று தீர்மானம் போட வைத்துநிறைவேற்றியுள்ளார்.
எனவே 29ம் தேதி டெல்லியில் நடைபெறப் போகும் பேச்சுவார்த்தையின்போதுஅச்சுதானந்தன் என்ன சொல்வார் என்பது இப்போதே தெளிவாக தெரிந்து விட்டது.இந்தப் பேச்சுவார்த்தையால் எந்தப் பலனும் ஏற்படப் பாவதில்லை, ஐந்து தென்மாவட்ட விவசாயிகளுக்கும் நன்மை விளையப் போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி அணையின் உயரத்தை அதிகரிப்பது ஒன்று மட்டுமேவிவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய நடவடிக்கையாக இருக்க முடியும் என்றுகூறியுள்ளார் ஜெயலலிதா.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications