ஜெகஜால ஜெயலட்சுமியின் அண்ணன் கைது
மதுரை:ஏட்டு முதல் எஸ்.பி. வரை காக்கிகளில் பல தரப்பட்டவர்களையும் வளைத்துப்போட்டு தமிழகத்தையே உலுக்கிய சிவகாசி ஜெயலட்சுமியின் அண்ணன் ராஜாராம்,பண மோசடி வழக்கில் சிக்கி கைதாகியுள்ளார்.
சிவகாசி ஜெயலட்சுமியின் மூத்த சகோதரர் ராஜாராம். இவர் மதுரை சம்மட்டிப்புரத்தில்வணிக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். சுண்ணாம்பு வியாபாரம் செய்வதாகவும்,சுண்ணாம்புத் தூளை அடைத்து விற்பனை செய்ய பாலிதீன் பைகள் தேவை என்றும்பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார்.
இந்த விளம்பரத்தைப் பார்த்த கோவில்பட்டியைச் சேர்ந்த குருசாமி என்பவர் ரூ.65,000 மதிப்புள்ள பாலிதீன் பைகளை ராஜராமுக்கு விற்றார். இதேபோலமதுரையைச் சேர்ந்த ஜி.எம். பர்னிச்ச்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் ரூ. 88,000மதிப்புள்ள பொருட்களை ராஜாராம் வாங்கினார்.
மேலும் அதேபோல மதுரையைச் சேர்ந்த ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்திடம் ரூ. 78,000மதிப்புள்ள கம்ப்யூட்டர் சாதனங்களை வாங்கியுள்ளார். இவர்கள் அனைவருக்கும் பின்தேதியிட்ட காசோலைகளை கொடுத்துள்ளார். ஆனால் அத்தனை காசோலைகளும்திரும்பி விட்டன.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அனைவரும் ராஜாராமைத் தேடி வந்தபோது அங்குஅவர் இல்லை. காலி செய்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார். இதேபோல கோவை,ராசிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக ரூ. 25 லட்சம்வரை மோசடி செய்துள்ளார் ராஜாராம்.
இதுதொடர்பாக மதுரை எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்தன.இதைத் தொடர்ந்து ராஜாராமை போலீஸார் தேடி வந்தனர்.
ஆனால், அவர் தலைமறைவாகிவிட்டார். ராஜாராமால் ஏமாந்த சிலர் அவரைஉடுமலைப்பேட்டையில் வைத்துப் பிடித்து மதுரை எஸ்.எஸ். காலனி காவல்நிலையத்திற்குக் கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
அவரைக் கைது செய்த போலீஸார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.ஜெயலட்சுமியைத் தொடர்ந்து அவரது குடும்பத்தில் இன்னொருவரும் மோசடிவழக்கில் கைதாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications