முல்லைத் தீவில் இலங்கை விமான படை தாக்குதல்
கொழும்பு:விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் பகுதிகள் மீது இன்று இலங்கை விமானப் படை பயங்கரதாக்குதல் நடத்தியது. எக்காரணமும் இன்றி திடீரென இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இன்று புலிகள் மாவீரர் தினத்தை கடைபிடித்து வரும் நிலையில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
கிளிநொச்சிக்கு 8 கி.மீ. தொலைவில் வடக்கச்சி என்ற இடத்தில் 20க்கும் மேற்பட்ட குண்டுகள் வந்து விழுந்துவெடித்தன. மேலும் முல்லைத் தீவில் புதுக்குடியிருப்பு பகுதியில் புலிகளின் கடற்படை பயிற்சி மையத்தின் மீதும்விமானங்கள் குண்டு வீசின.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிர்ச் சேதம் குறித்து உடனடியாக தகவல் இல்லை என புலிகளின் செய்தித்தொடர்பாளர் ராசைய்யா இளந்திரையன் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இலங்கைக்கு நிதியுதவி செய்யும் அமெரிக்கா, ஜப்பான், நார்வே மற்றும் ஐரோப்பிய யூனியன்நாடுகள் வாஷிங்டனில் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகின்றன.
இதற்கிடையே 4 நாள் பயணமாக இலங்கை அதிபர் ராஜபக்ஷே வரும் சனிக்கிழமை இந்தியா வருகிறார்.டெராடூனில் ஞாயிற்றுக்கிழமை ஓய்வெடுக்கும் ராஜபக்ஷே திங்கள்கிழமை டெல்லி வருகிறார்.
இந் நிலையில் இந்திய வெளியுறவுச் செயலாள் சிவசங்கர் மேனன் நாளை கொழும்பு செல்கிறார். அப்போதுதமிழர்கள் மீதான ராணுவ தாக்குதல்கள் குறித்தும், யாழ்பாண நெடுஞ்சாலை திறப்பு குறித்தும் விவாதிப்பார்என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications