பஸ்சில் போலீஸ் புடை சூழ திருடிய கைதி!
மதுரை:வழக்கு விசாரணைக்காக பேருந்தில் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச்செல்லப்பட்ட கைதி, தனது அருகே அமர்ந்திருந்த பயணியின் செல்போன், பணம்உள்ளிட்டவற்றை திருடிய பலே சம்பவம் மதுரை அருகே நடந்தது.
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் ஓடும் ரயிலில் பயணிகளிடம்சூட்கேஸ் திருடுவதில் ஜெகஜால கில்லாடி. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையஇவரை போலீஸார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளனர்.
இந் நிலையில் நாகர்கோவில் நீதிமன்றத்தில வழக்கு ஒன்றில் இவரைஆஜர்படுத்தவதற்காக அரசுப் பேருந்து மூலம் போலீஸார் வேலூரிலிருந்து அழைத்துவந்தனர்.
மதுரை அருகே மேலூரில் பஸ் வந்தபோது, அந்த பேருந்திலிருந்து ஒரு சூட்கேஸ்பறந்து ஜன்னல் வழியாக சாலையில் விழுந்தது. இதை பின்னால் வந்து கொண்டிருந்தஇன்னொரு அரசுப் பேருந்தின் டிரைவர் பார்த்து திடுக்கிட்டார்.
என்னடா இது என்று குழம்பிய அவர் முன்னால் சென்ற பேருந்தை ஓவர்டேக் செய்துஅப்பேருந்தை நிறுத்தினார். ஜன்னல் வழியாக சூட்கேஸ் வந்து விழுந்ததாக அவர்டிரைவரிடம் கூறவே, அந்த பேருந்தில் குழப்பம் ஏற்பட்டது. அனைத்துப்பயணிகளும் தங்களது சூட்கேஸ்கள் பத்திரமாக இருக்கிறதா என்று பார்க்கும்படிடிரைவரும், கண்டக்டரும் கூறினர்.
இதையடுத்து அனைவரும் சோதனை செய்து பார்த்தபோது, சென்னையைச் சேர்ந்ததனியார் நிறுவன அதிகாரி வெங்கடேஷ் குமார் என்பவரின் சூட்கேஸ் மட்டும்காணவில்லை. இதையடுத்து அவருக்கு அருகே அமர்ந்திருந்த கைதி ராஜேந்திரன் மீதுசந்தேகம் எழுந்தது.
அவரை போலீசார் சோதனையிட்டபோது அவர் உட்கார்ந்திருந்த இடத்திற்குக் கீழேசெல்போன், பணம், ஏ.டி.எம். கார்டு, செக் ஆகியவை கிடந்தன.
சூட்கேஸை திறந்து பொருட்களை லாவகமாக திருடிய ராஜேந்திரன் சூட்கேஸை தூக்கிநைசாக வெளியே போட்டுள்ளார். 3 போலீஸார் அருகே அமர்ந்திருந்த நிலையிலும்கூட தனது திருட்டுப் பழக்கத்தை விட முடியாத ராஜேந்திரன் சூட்கேஸ் திருடியதாகதற்போது புதிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications