இந்தியர்.. துபாய் சிறையில் 21 ஆண்டுகளாய்
துபாய்:துபாய் சிறையில் பால் ஜார்ஜ் என்ற இந்தியர் 21 ஆண்டுகளாக வாடி வருகிறார்.துபாயிலேயே அதிக காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜார்ஜ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
பால் ஜார்ஜ் கடந்த 1979ம் ஆண்டு வேலை பார்ப்பதற்காக துபாய்க்கு வந்தார்.துபாயில் உள்ள அவரது சகோதரரின் பர்னிச்சர் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.தச்சரான ஜார்ஜ், 39 வயதாக இருந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த 2 குடும்பங்களைச்சேர்ந்த 7 பேர் உள்பட 9 பேரை படுகொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.
துபாய் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் கடந்த 21 ஆண்டுகளாக சிறையில்வாடி வருகிறார். மது போதையில் இக்குற்றத்தை செய்ததாக அப்போது கூறப்பட்டது.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இருப்பினும் கொலை செய்யப்பட்ட குடும்பத்தினர் இவரை மன்னிப்பதாக கடந்த1996ம் ஆண்டு அறிவித்தனர். இதனால் அவருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்படவில்லை. அதேசமயம் அவரை துபாய் அரசு விடுதலை செய்யவும்இல்லை.
இதுகுறித்து கல்ப் நியூஸ் பத்திரிகைக்கு ஜார்ஜ் கொடுத்துள்ள பேட்டியில், இருபாகிஸ்தான் குடும்பத்தினரும் என்னை மன்னிப்பதாக தெரிவித்தும் கூட துபாய் அரசுஎன்னை விடுதலை செய்யவில்லை.
என்னை விடுதலை செய்ய முயற்சிகள் செய்வதாக இந்திய அரசு கூறி வருகிறது.இருப்பினும் இதுவரை எந்த உதவியும் எனக்குக் கிடைக்கவில்லை. எனது மகன்தொடர்ந்து இந்தியத் தூதரகத்தை இதுதொடர்பாக நாடி வருகிறான். ஆனால் ஒருபயனும் இல்லை என்று கூறியுள்ளார்.
ஜார்ஜுக்கு தற்போது 60 வயதாகிறது. அவர் சிறைக்குச் சென்றபோது அவரதுமகளுக்கு 10 வயதும், மகனுக்கு 3 வயதும் நடந்து கொண்டிருந்தது. இருவரும்அப்போது இந்தியாவில் இருந்தனர். தற்போது ஜார்ஜின் மகள் துபாய் அருகே உள்ளஅஜ்மான் எமிரேட் என்ற இடத்தில் வசிக்கிறார். மகன் துபாயில் பணியாற்றிவருகிறார்.
துபாயிலேயே அதிக காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி ஜார்ஜ்தான்என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications