நீலகிரி: தொடரும் நிலச்சரிவு-பாலம் சேதம்
ஊட்டி:நீலகிரி மலைப் பாதையில் இன்றும் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால்சீரமைப்புப் பணிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், பர்லியாறு பகுதியில் மேலும் ஒரு பாலம் மழை வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது. கன மழை காரணமாக நீலகிரி மலைப் பாதையில் பல இடங்களில்மண் சரிவும், பாறைகள் உருண்டும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவற்றை சரி செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந் நிலையில் தொடர்ந்துமழை பெய்து வருவதால நிலச்சரிவுகளும் தொடர்ந்து வருகின்றன. இன்றும் மேலும்சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் அங்கு சீரமைப்புப் பணிகள்பாதிக்கப்பட்டுள்ளன.
சில்வர் பாலம் பகுதியில், சிறு சிறு நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இப்பகுதியில்தற்காலிகமாக பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக குழாய்கள்பதிக்கப்பட்டு வருகின்றன. இப்பணி இன்று முடிந்து இன்னும் ஒரு வாரத்தில்
இப்பாதை வழியாக போக்குவரத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.கன மழைக்கு அரவக்காடு பகுதியில் ஒரு தொழிலாளர் பலியானார். ஒருவர்படுகாயமடைந்தார்.












Click it and Unblock the Notifications