போலீஸை பழி தீர்ப்பேன்-ரவுடி மனைவி சபதம்!
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் அருகே போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்ட ரவுடி கொர கிருஷ்ணனின்மனைவி அபிராமி, தனது மகனை பெரிய ஆளாக்கி, போலீஸாரை பழி வாங்கப்போவதாக கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) முன்பு சினிமா பாணியில் ஆவேசமாக சபதம்இட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் புறநகர்ப் பகுதியில் பிரபல ரவுடி கொர கிருஷ்ணனை போலீஸார்என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அவனது உடல் காஞ்சிபுரம் அரசுமருத்துவமனையில், பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தது.
கொர கிருஷ்ணன் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் அவனது மனைவி அபிராமி,மகன், மகள்கள், உறவினர்கள் ஆகியோர் மருத்துவனை வளாகத்தில் திரண்டனர்.தனது கணவரின் உடலைப் பார்க்க வேண்டும் என போலீஸாரிடம் அபிராமி கேட்டார்.
அதற்குப் போலீஸார், பிரேதப் பரிசோதனை நடந்து கொண்டுள்ளது. முடிந்தபிறகுதான் பார்க்க முடியும் என்று போலீஸார் கூறினர். இதை ஏற்க மறுத்தஅபிராமியும் மற்றவர்களும் அங்கு ஆர்ப்பாட்டத்தில் குதித்தனர். இதையடுத்து மாலை4.30 மணியளவில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட கொர கிருஷ்ணனின் உடல்அபிராமியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் பிணத்தை வாங்க அவர் மறுத்தார். ஆர்.டி.ஓ. சீதாலட்சுமி வந்து தன்னிடம்,தனது கணவரின் மரணம் குறித்து விளக்கினால்தான் உடலைப் பெற்றுக் கொள்வேன்என்று அவர் கோபமாக கூறினார். இதையடுத்து சீதாலட்சுமி அங்கு வந்தார்.
அப்போது அவரிடம், எனது கணவர் கொல்லப்பட்ட தகவலை உடனடியாகஎங்களுக்குத் தெரிவிக்கவில்லை. டிவி செய்தியைப் பார்த்துத்தான் நான் வந்தள்ளேன்.நாயை விரட்டுவது போல என்னை போலீஸார் விரட்டுகிறார்கள்.
அவர் மீது எங்கு குண்டு பாய்ந்தது? எத்தனை குண்டுகள் பாய்ந்தன, எங்கு காயம்ஏற்பட்டது என்ற விவரங்களை போலீஸார் தெரிவிக்க மறுக்கிறார்கள். எனதுகணவரின் உடலை புதைக்கப் போகிறோம் என்று கூறியதற்கு, புதைக்கக் கூடாது,எரிக்க வேண்டும் என்று போலீஸார் கண்டிப்புடன் கூறுகிறார்கள். எங்களுக்கு நியாயம்கிடைத்தால்தான் உடலைப் பெற்றுக் கொள்வேன் என்றார் அபிராமி.
ஒரு கட்டத்தில் ஆவேசமடைந்த அபிராமி, எனது கணவரைக் கொன்ற போலீஸாரைநான் சும்மா விட மாட்டேன். எனது மகனை நன்கு படிக்க வைத்து, பெரிய ஆளாக்கிஅவன் மூலம் போலீஸாரை நான் பழி வாங்குவேன் என்று ஆவேசமாக கூறியதால்அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரமாக கொர கிருஷ்ணனின் உடல் அபிராமிஉள்ளிட்டோரால் பெறப்படாமல் வாகனத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. பின்னர்உடலை அவர்கள் பெற்றுக் கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications