25 லட்சம் கலர் டிவி-13 நிறுவனங்கள் விண்ணப்பம்
சென்னை:தமிழக அரசின் சார்பில் 2ம் கட்டமாக வினியோகிக்கப்படவுள்ள 25 லட்சம் கலர் டிவிபெட்டிகளைத் தயாரித்து வழங்க விருப்பம் தெரிவித்து 13 நிறுவனங்கள் டெண்டர்கொடுத்துள்ளன.
திமுகவின் தேர்தல் வாக்குறுதியான இலவச கலர் டிவித் திட்டத்தை தமிழக அரசுஅமல்படுத்தியுள்ளது. முதல் கட்டமாக செப்டம்பர் 15ம் தேதி 30,000 கலர் டிவிக்கள்வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 25 லட்சம் கலர் டிவி பெட்டிகளை வழங்கதமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக சர்வதேச அளவிலான டெண்டர் விடப்பட்டது. இந்த டெண்டர்களைதிறக்கும் நிகழ்ச்சி முதல்வர் கருணாநிதி முன்னிலையில், தலைமைச் செயலகத்தில்உள்ள 10வது மாடி மாநாட்டு அரங்கில் நடந்தது.
டெண்டர் விண்ணப்பங்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் கருணாநிதிமுன்னிலையில் திறக்கப்பட்டன. மொத்தம் 16 நாடுகளைச் சேர்ந்த 120 நிறுவனங்கள்டெண்டர் விண்ணப்பங்களைப் பெற்றன. அதில் 13 நிறுவனங்கள் மட்டும் தங்களுக்குடெண்டர் வங்கக் கோரி விண்ணப்பம் அளித்துள்ளன. இவற்றில் சீனாவைச் சேர்ந்த 2நறுவனங்களும் அடக்கம்.
டெண்டர் திறப்பு நிகழ்ச்சியில், அமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் சார்பில் சுதர்சனம்,பாமக சார்பில் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட்சார்பில் கோவிந்தசாமி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் அப்துல் பாசித்,விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் செல்வப் பெருந்தகை உள்ளிட்ட சட்டமன்றஅனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவும் கலந்து கொண்டது.
அடுத்த கட்ட பரிசீலனைக்கு இதில் 12 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.இவை குறிப்பிட்டுள்ள ரேட் (விலைப் புள்ளி) விவரம் நாளை திறக்கப்படும். அதன்பின்னர் யாருக்கு டெண்டர் கிடைக்கும் தரப்படும் என்பது தெரிய வரும்.
25 லட்சம் டிவிகள் தயாரிக்கப்பட வேண்டியிருப்பதால் பல நிறுவனங்களுக்குஆர்டர்க்ளைப் பிரித்துக் கொடுக்கலாம் என அரசு கருதுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications