மத்திய அரசுக்கு அதிமுக ஆதரவா?-ஜெ மறுப்பு
டெல்லி:நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பிரச்சினைகளின்அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படும் என அதிமுக மாநிலங்களவைகொறடா மலைச்சாமி கூறியதாக வந்த தகவலை ஜெயலலிதா மறுத்துள்ளார்.
இன்று தொடங்கும் இந்தக் கூட்டத் தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாகநாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி தனது வீட்டில்அனைத்துக் கட்சிக் கொறடாக்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
இக் கூட்டத்தில் அதிமுக சார்பில் கலந்து கொண்ட மாநிலங்களவை கொறடாமலைச்சாமி பேசுகையில், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மத்திய அரசு கொண்டுவரும் சட்ட முன்வடிவுகள், மசோதாக்கள் ஆகியவற்றை, பிரச்சினைகளின்அடிப்படையில் ஆதரிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாஅறிவுறுத்தியுள்ளார்.
எனவே பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய கூட்டணி அரசுக்குபிரச்சினைகளின் அடிப்படையில் அதிமுக ஆதரவு தரும் என்றார்.
இதன் மூலம் காங்கிரசை தாஜா செய்யும் வேலையை அதிமுக ஆரம்பித்துள்ளதாகசெய்திகள் பரவின. டெல்லியிலும் இந்தச் செய்தி முக்கிய இடம் பெற்றது.
இந் நிலையில் இந்தத் தகவலை மறுத்துள்ளார் அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காங்கிரஸ் கூட்டணியில் திமுக தொடரும் வரை மத்திய அரசுக்கு ஆதரவு தரும்சிந்தனையே எங்களுக்கு இல்லை. எங்கள் கட்சி கொறடா மலைச்சாமி அப்படிப்பேசவே இல்லை. பத்திரிக்கைகள் தான் செய்தியை திரித்து வெளியிட்டுவிட்டன.
மத்திய அரசுக் கூட்டணி கருணாநிதியின் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டு ஆடிக்கொண்டிருக்கிறது. இந் நிலையில் அவர்களை ஆதரிக்க வேண்டிய அவசியம்எங்களுக்கில்லை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
ஆனால், பிரச்சனை அடிப்படையில் ஆதரவு என்று மலைச்சாமி மூலம் காங்கிரஸ்கட்சிக்கு அதிமுக நூல்விட்டுப் பார்த்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள்கருதுகின்றனர்.
இந்த ஆதரவு குறித்து காங்கிரஸ் கட்சி எந்த கருத்தும் தெரிவிக்காமல் அமைதிகாத்ததால் தனது நிலையை அதிமுக மாற்றிக் கொண்டுள்ளதாகக் கருதப்படுகிறது.
மாநிலங்களவையில் அதிமுகவுக்கு எம்பிக்கள் இருந்தாலும் மக்களவையில் ஒருஎம்பியும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications