1,700 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் செளதி வருகை
துபாய்:இந்தியாவிலிருந்து கிளம்பிய 1,700 பேர் கொண்ட முதல் ஹஜ் யாத்திரைக் குழுவினர்ஜெட்டா வந்து சேர்ந்தனர்.
இந்த ஆண்டுக்கான புனித ஹஜ் யாத்திரை தொடங்கிவிட்டது. உலகெங்கிலும்இருந்தும் உள்ள முஸ்லீம்கள் செளதிக்கு வர ஆரம்பித்துள்ளனர்.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1.57 லட்சம் பேர் ஹஜ் யாத்திரைமேற்கொள்ளவுள்ளனர். தமிழகம், புதுச்சேரி, அந்தமான் ஆகிய மாநிலங்களிலிருந்து3,800 பேர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.
ஹஜ் யாத்ரீகர்களுக்காக சென்னையிலிருந்து 14 சிறப்பு விமானங்கள்இயக்கப்படவுள்ளன. டிசம்பர் 3ம் தேதி முதல் விமானம் சென்னையிலிருந்துகிளம்புகிறது. 10ம் தேதி வரை இந்த சிறப்பு விமானங்கள் இயக்கப்படும்.இந்தியாவில் இருந்து முதல் ஹஜ் சிறப்பு விமானங்கள் நேற்று கிளம்பின. முதல்குழுவில் இடம் பெற்றிருந்த 1,700 பேர் செளதி அரேபியா சென்றடைந்தனர்.
ஜெட்டா நகரில் வந்திறங்கிய 215 பேரை விமான நிலையத்தில் செளதிஅரேபியாவுக்கான இந்தியத் தூதர் எம்.ஓ.எச்.பாரூக் விமான நிலையத்தில்வரவேற்றார். இதேபோல 1,505 பேர் மதீனா நகரை அடைந்தனர். அவர்களைதுணைத் தூதர் ஆசப் சயீத் வரவேற்றார்.
இந்த 1,505 பேரும் டெல்லி, நாக்பூர், லக்னோவிலிருந்து வந்தவர்கள் ஆவர். ஹஜ்யாதீர்கள் வருகை குறித்து சயீத் கூறுகையில், செளதி அரேபியாவுக்கு வரும் ஹஜ்யாத்ரீகர்கள் கண்டிப்பாக போலியோ தடுப்பு மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் எனசெளதி அரசு வலியுறுத்தியுள்ளது.
இதற்கான சொட்டு மருந்துகள் செளதி விமான நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளன.செளதிக்கு முதலில் வந்த குழுவில் இருந்தவர்களுக்கு நமது நாட்டிலேயே தடுப்புமருந்து கொடுக்கப்பட்டு விட்டதால் இங்கு அவர்களுக்கு சொட்டு மருந்துதரப்படவில்லை.
இந்த ஆண்டு இந்தியாவிலிருது 1.57 லட்சம் யாத்ரீகர்கள் ஹஜ் பயணமாகவரவுள்ளனர். இவர்களில் இந்திய ஹஜ் கமிட்டி மூலம் 1.07 லட்சம் பேரும், தனியார்சுற்றுலா நிறுவனங்கள் மூலம் 47,000 பேரும் வரவுள்ளனர்.
இந்தோனேசியாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவைச் சேர்ந்தவர்கள்தான் இந்த ஆண்டுஅதிக அளவில் ஹஜ் யாத்திரை மேற்கொள்ளவுள்ளனர்.முதல் குழு தவிர மேலும் 45,910 பேர் மதீனாவுக்கும், மற்றவர்கள் ஜெட்டாவுக்கும்வருகை தரவுள்ளனர் என்றார் சயீத்.
டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூர், லக்னோ, அகமதாபாத் ஆகியநகரங்களிலிருந்து வரும் பயணிகளை செளதி அரேபியன் ஏர்லைன்ஸ்விமானங்களும், கொல்கத்தா, நாக்பூர், ஜெய்ப்பூர், ஸ்ரீநகர், கோழிக்கோடு ஆகியஊர்களிலிருந்து வரும் யாத்ரீகர்களை ஏர் இந்தியா விமானங்களும் செளதிக்குஅழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 325 விமானங்கள் இதில்ஈடுபடுத்தப்படவுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications