ஜாமீன் தர ஆள் இல்லை: தவிக்கும் ஜெயலட்சுமி!
மதுரை:நீதிமன்ற ஜாமீன் கிடைத்தும், ஜாமீன் தர ஆள் கிடைக்காததால், சிவகாசிஜெயலட்சுமியால் சிறையிலிருந்து விடுதலை ஆக முடியாமல் தவித்து வருகிறார்.
தமிழக காவல்துறையை தனது முந்தையில் முடிந்து வைத்து ஆட்டிப் படைத்தசிவகாசி ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டு அவர் மீது பல்வேறு வழக்குகள்தொடரப்பட்டன.
திண்டுக்கல் டிஎஸ்பியாக இருந்த ராஜசேகரின் மனைவி விசாலாட்சி தற்கொலைசெய்து கொண்ட வழக்கில் ஜெயலட்சுமிக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை கிடைத்தது.
இந்த வழக்கில் மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜெயலட்சுமிக்கு ஜாமீன் வழங்கியது.இதேபோல நகை மோசடி வழக்கு உள்ளிட்ட மோசடி வழக்குகளிலும் ஜெயலட்சுமிக்குஜாமீன் கிடைத்தது.
தொடரப்பட்ட அனைத்து வழக்குகளிலும் ஜெயலட்சுமிக்கு ஜாமீன் கிடைத்து கூடஅவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குக்காரணம் ஜெயலட்சுமிக்கு ஜாமீன் உத்தரவாதம் வழங்க ஆள் கிடைக்கவில்லையாம்.
4 மோசடி வழக்குகளில் அவருக்கு இரு நபர் ஜாமீன் உத்தரவாதம், ரூ. 5,000மதிப்புள்ள சொத்து ஆவணத்தையும் தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை தலைமைநீதித்துறை நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் இதை வழங்க ஆள் கிடைக்காததால் ஜெயலட்சுமி சிறையிலிருந்துவெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அவரது உறவினர்கள் யாரும் ஜாமீன் உத்தரவாதம் தர முன் வரவில்லையாம்.
இதனால் ஆட்களைத் தேடும் பணியில் ஜெயலட்சுமியின் வக்கீல்கள் அலைந்துவருகிறார்கள்.
விரைவில் ஆட்களைப் பிடித்து தன்னை வெளியே கொண்டு வருமாறுவழக்கறிஞர்களிடம் கெஞ்சி வருகிறாராம் ஜெயலட்சுமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications