அரபிக் கடலில் வீணாக கலக்கும் பெரியாறு நீர்!
மதுரை:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து வெளியேற்றப்பட்டு வரும் நீரின் பெரும்பகுதி அரபிக் கடலில் போய் வீணாக கலந்து வருகிறது.
முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டம் 138 அடியாக உள்ளது. 142 அடி வரைநீரைத் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் அதை கேரளம் ஏற்க மறுத்துவருகிறது.
இதனால் அணைக்கு தொடர்ந்து வந்து கொண்டுள்ள அதிக அளவிலான நீர் வீணாககேரளப் பகுதிக்குத் திருப்பி விடப்பட்டு கடலில் போய்க் கலந்து வருகிறது.
இந்த நீர் அணையில் தேக்கி வைக்கப்பட்டால் பின்னால் தமிழக விவசாயிகளுக்குபயன்படும். ஆனால், அவ்வாறு பயன்பட்டுவிடக் கூடாது என்பதில் கேரளம்தெளிவாக உள்ளது.
பெரியாறு அணைக்கு வரும் உபரி நீரை தமிழக பகுதிக்குள் அதிக அளவுக்குஎடுக்கும் முயற்சிகள் சில நாட்களாகவே நடந்து வந்தன. இருப்பினும் தண்ணீரைஎடுக்க பயன்படுத்தப்பட்ட ராட்சத குழாய்களில் அடைப்பு ஏற்பட்டதால் அந்தப் பணிஇடையில் பாதிக்கப்பட்டிருந்தது.
தற்போது மண் அடைப்பு சரி செய்யப்பட்டு உபரி நீரை தமிழக பகுதிக்குள் திருப்பிவருகின்றனர் பொதுப்பணித்துறையினர். இருப்பினும் அதிக அளவில் நீர் வருவதால்பெரும்பாலான நீர் கேரள பகுதிக்கே திருப்பி விடப்பட்டு வருகிறது.
தமிழக பகுதிக்குள் 1,100 கன அடி நீரும், கேரள பகுதிக்கு 5,242 கன அடி நீரும்தற்போது திருப்பி விடப்பட்டு வருகிறது. கேரளாவுக்குள் பாயும் நீர் அப்படியேஅரபிக் கடலுக்கே போய்ச் சேருகிறது.
இதற்கிடையே, நவம்பர் 14ம் தேதி முதல் நிறுத்தப்பட்டிருந்த பெரியாறு நீர் மின்உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. மொத்தம் உள்ள நான்கு மின் உற்பத்திஜெனரேட்டர்களில் 3 மட்டும் தற்போது செயல்படுகின்றன. ஒன்றில் மண் அடைப்புஏற்பட்டிருந்ததால் அது இன்னும் இயங்கவில்லை.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications