மண்வெட்டியால் பஞ். தலைவர் படுகொலை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நக்கலமுத்தன்பட்டிபஞ்சாயத்துத் தலைவர் ஜக்கையாவை, அதே பஞ்சாயத்தின் துணைத் தலைவரானதிருப்பதிராஜ் மண்வெட்டியால் வெட்டிப் படுகொலை செய்தார்.
நக்கலமுத்தன்பட்டி தலித் பஞ்சாயத்துக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜக்கையாவெற்றி பெற்று தலைவரானார். முன்னாள் தலைவியான ரெஜீனா மேரியின் கணவர்திருப்பதிராஜ் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேர்தல் முடியும் வரை ஜக்கையாவுக்கு ஆதரவாக திருப்பதிராஜ் தீவிரப் பிரசாரம்செய்து வந்தாராம். தலைவர் பதவிக்கு வந்தவுடன், தான் சொல்லும்படி நடக்குமாறுஜக்கையாவை, திருப்பதிராஜ் வற்புறுத்தியதாக தெரிகிறது. ஆனால் அதைக் கேட்கஜக்கையா மறுத்து விட்டாராம்.
இதனால் திருப்பதிராஜ் ஆத்திரமடைந்தார். இந் நிலையில் புதன்கிழமை காலைஐந்தேமுக்கால் மணியளவில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சைக்கிளில் ஜக்கையாசென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர் மண்வெட்டியால் ஜக்கையாவை சரமாரியாகதாக்கினார்.
இதனால் நிலை குலைந்த ஜக்கையா அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் விடாதஅந்த மர்ம நபர் ஜக்கையாவை விரட்டி விரட்டி அடித்தும், வெட்டியும் படுகொலைசெய்தார்.
சம்பவ இடத்திலேயே ஜக்கையா பிணமானார். திருப்பதிராஜ்தான், இந்தக் கொலையைசெய்திருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
இந்த சம்பவத்திற்குப் பின்னர் திருப்பதிராஜ் தலைமறைவாகி விட்டார். அவரைபோலீஸார் தேடி வருகின்றனர்.
ஜக்கையா குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் நிதியுதவி அளிப்பதாக தமிழக அரசுஅறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கையில்,
நக்கலாமுத்தன் பட்டி கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் சக்கன் என்கிற ஜக்கையாபடுகொலை செய்யப்பட்ட செய்தியை அறிந்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சிஅடைந்தார்.
ஜக்கையாவின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர்,ஜக்கையாவின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 2லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications