நீரில் மிதக்கும் நெல்லை மீள்கிறது!
திருநிெல்வேலி:அடித்து வெளுத்த கன மழை காரணமாக தண்ணீரில் மிதந்து வந்த நெல்லை மாநகரில்வெள்ளம் வடிய ஆரம்பித்துள்ளது.
வங்கக் கடலில் கடந்த 13 நாட்களாக நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்ததாழ்வு மண்டலம் இலங்கையின் கிழக்கு நோக்கி நகரத் தொடங்கியதால் தென்கோடிமாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த 2 நாட்களுக்குமுன்பு கன மழை பெய்யத் தொடங்கியது.
விடிய விடிய பெய்த இந்த பலத்த மழையால் இரு மாவட்டங்களிலும் பல்வேறுஊர்களில் தண்ணீர் சூழ ஆரம்பித்தது. மேலும் தாமிரபரணி உள்ளிட்ட முக்கியஆறுகள் அனைத்திலும் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
குற்றாலம் அருவிகளிலும் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தபேய் மழை மற்றும் ஆற்று வெள்ளம் காரணமாக நெல்லை, தூத்துக்குடிமாவட்டங்களின் பல்வேறு ஊர்களில் வெள்ள நீர் புகுந்தது.
குறிப்பாக நெல்லை மாவட்டம் வெள்ளக்காடாகிப் போனது. நெல்லை மாநகரின்பெரும்பாலான பகுதிகளில் திமுதிமுவென தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகினர்.
புகழ் பெற்ற நெல்லையப்பர் கோவில் உள்பட நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில்மிதந்தன. இதுதவிர பேட்டை, முக்கூடல், சேரன்மாதேவி, திருவேங்கடேம், கல்லூர்உள்ளிட்ட ஊர்கள் நீரில் மிதந்தன.
நெல்லை நகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள்பாதுகாப்பான பகுதிகளுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். நெல்லை நகரம் தீவு போலமாறிக் காணப்பட்டது.
இந் நிலையில் மழை தற்போது சற்று தணிந்திருப்பதால், வெள்ள நீர் வடியத்தொடங்கியுள்ளது. தாமிரபரணியிலும் வெள்ளப் பெருக்கு சற்றே மட்டுப்பட்டுள்ளது.குற்றால நீர்வீழ்ச்சிகளிலும் வெள்ளம் சற்றே தணிந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கும் இடமான புன்னைக்காயல் கிராமத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பிற பகுதிகளிலிருந்து அந்தக் கிராமம்முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நீரை வடிய வைக்கும் முயற்சிகள் இரு மாவட்டங்களிலும்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை இரு மாவட்டநிர்வாகங்களும் முடுக்கி விட்டுள்ளன.












Click it and Unblock the Notifications