என்.எல்.சி. ஊழியர்கள் இன்று இரவு ஸ்டிரைக்!
நெய்வேலி:காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெய்வேலி அனல் மின்கழக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக இன்று இரவு முதல் ஒரு நாள் அடையாளவேலைநிறுத்தம் செய்ய நிரந்தர ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
என்.எல்.சியில் சுமார் 13,000 ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.தங்களுக்கு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும், முன் பணமாக ரூ.1000 வழங்கவேண்டும். இதை சம்பளத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என்று கோரி கடந்த 9நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
இந்தப் போராட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமான திமுகவின்தொழிலாளர் முன்னேற்ற சங்கம் (தொ.மு.ச) ஆதரவு தராமல் இருந்தது. மற்றதொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் ஒப்பந்த ஊழியர்களின் போராட்டம் வலுவடைந்து வருவதைத்தொடர்ந்து தொ.மு.சவும் தற்போது போராட்டத்தை ஆதரித்துள்ளது.
இந் நிலையில், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக ஒரு நாள் அடையாளவேலைநறுத்தப் போராட்டம் நடத்த நிரந்தர ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். இந்தப்போராட்டம் இன்று இரவு ஷிப்டுக்குப் பின்னர் தொடங்கி நாளை வரை நடைபெறும்.
ஏற்கனவே மழை, வெள்ளத்தாலும் ஒப்பந்த ஊழியர்கள் போராட்டத்தாலும் நிலக்கரிவெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில், கிட்டத்தட்ட 30,000ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதிப்பதால், மின்உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications