அப்சல் விவகாரம்: நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு
டெல்லி:அப்சல் விவகாரம் மக்களவையில் இன்று பெரும் புயலைக் கிளப்பியது. இதனால் 2முறை அவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில்மறைந்த பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கன்ஷிராமுக்கு இரங்கல் தெரிவித்து அவைஒத்திவைக்கப்பட்டது.
இன்று பகல் 11 மணிக்கு அவை கூடியது. அப்போது கேள்வி நேரத்திற்குச் செல்லசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி முயன்றபோது, பாஜக, சிவசேனா ஆகிய கட்சிகளின்உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கை முன் கூடி அப்சலை உடனடியாக தூக்கிலிடக்கோரி கோஷமிட ஆரம்பித்தனர்.
இதனால் அவையில் அமளி நிலவியது. கேள்வி நேரத்தை எடுத்துக் கொள்ளமுடியவில்லை. அப்சலைத் தூக்கிலிடு என்ற கோஷத்துடன் இதுதொடர்பான செய்தித்தாள் செய்திகள், தட்டிகளுடன் இரு கட்சிகளின் உறுப்பினர்களும் கோஷமிட்டதால்அவையில் பெரும் அமளி காணப்பட்டது.
ஓட்டு வங்கியை மனதில் கொண்டு அப்சலைத் தூக்கிலிடாமல் அரசு தவிர்த்துவருவதாக பாஜக, சிவசேனா உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த சமயத்தில் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்தில் முலாயம் சிங் யாதவ் அரசைக் கலைக்ககாங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக கூறி அவர்கள்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சபையில் பெரும் கூச்சல், குழப்பம் நிலவியது. யார் என்ன பேசுகிறார்கள்என்பதே கேட்கவில்லை. அனைவரையும் இருக்கைகளுக்குப் போகுமாறு சபாநாயகர்பலமுறை கூறியும் யாரும் கேட்கவில்லை. இதனால் 11.15 மணி வரைக்கும் சபையைசபாநாயகர் ஒத்திவைத்தார்.
பின்னர் 11.15 மணிக்கு சபை மீண்டும் கூடியபோதும் 3 கட்சிகளையும் சேர்ந்தஉறுப்பினர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் பிற்பகல் 2 மணி வரைக்கும்சபையை ஒத்திவைத்து விட்டு வெளியேறினார் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications