தமிழகத்தில் 40 லட்சம் போலி ரேஷன் கார்டுகள்
மதுரை:தமிழகத்தில் 40 லட்சம் போலி குடும்ப அட்டைகள் (ரேஷன் கார்டுகள்) புழக்கத்தில்இருப்பதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் ஏ.வ. வேலு கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் வேலு பேசுகையில், 2001ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்குப்படி தமிழகத்தில் 1.41 கோடி குடும்பங்கள் இருப்பதாகதெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 1.89 கோடி குடும்ப அட்டைகள் விநியோகம்செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு (அதாவது அதிமுக ஆட்சியில்) 40 லட்சம் குடும்ப அட்டைகள்விநியோகிக்கப்பட்டுள்ளன. அரசியல் நிர்ப்பந்தங்கள் ஒருபக்கம் மற்றும் வந்தவிண்ணப்பங்களை சரியாக பரிசீலிக்காதது ஆகியவை இந்த அளவுக்கு அதிகஅளவிலான குடும்ப அட்டைகள் விநியோகிக்க காரணம்.
எனவே, இந்த குடும்ப அட்டைகளை பரிசோதித்து போலியான கார்டுகளை நீக்கநடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதற்கு போலி ரேஷன் கார்டுகள்தான் முக்கியக் காரணம்.
ரேஷன் பொருள் விநியோகத்தை முறைப்படுத்த கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்த முயற்சிகளின் விளைவாக கடந்த 5 மாதங்களில் ரேஷன் அரிசிவிநியோகம் 3 லட்சம் மெட்ரிக் டன் என்ற அளவிலிருந்து 40,000 மெட்ரிக் டன்னாககுறைந்துள்ளது.
அரசின் நடவடிக்கையால், ரூ. 16 கோடி மிச்சமாகியுள்ளது. ரேஷன் அரிசி கடத்தியதாக31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
புதிய ரேஷன் கார்டு கோரி 10 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இன்னும்ஒன்றரை மாதங்களில் இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து புதிய கார்டுகள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும்.
ரேஷன் கார்டுகளை அச்சிடும் பணியை அந்தந்த மாவட்ட நிர்வாகங்களிடமேஒப்படைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தேவையில்லாத தாமதங்கள்தவிர்க்கப்படும்.
ரேஷன் கடைகளில் எடை குறைத்து பொருட்கள் தரப்படுவதாக எழும் புகார்களைத்தடுக்க அனைத்து ரேஷன் கடைகளிலும் மின்னணு எடை இயந்திரங்கள் வழங்கநடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, கூட்டுறவு அங்காடிகளிலும் இந்த எடைஇயந்திரங்கள் வழங்கப்படும்.
உணவுத் துறையை கம்ப்யூட்டர்மயமாக்கத் தேவையான ரூ. 298 கோடி நிதியைஒதுக்கக் கோரி மத்திய அரசுக்கு திட்ட அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications