தமிழகத்தில் கேரள வாகனங்கள் வழி மறிப்பு
கோவைமுல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் அத்துமீறல் போக்கைக்கண்டித்தும், அணையை கடற்படை வீரர்கள் ஆய்வு செய்ததைக் கண்டித்தும் கோவைமாவட்டத்தில் உள்ள கேரள எல்லைப் பகுதியில் தமிழக விவசாயிகள் இன்று கேரளாசெல்லும் வாகனங்களை மறித்து சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் கடும் எதிர்ப்பையும் மீறி, முல்லைப் பெரியாறு அணையைகொச்சியில் உள்ள கடற்படை நிபுணர்களைக் கொண்டு இன்று கேரள அரசு ஆய்வுசெய்தது.
தென் மண்டல கடற்படைக் கமாண்டர் தலைமையில் முல்லைப் பெரியாறு அணைக்குவந்த 17 பேர் கொண்ட கடற்படை நிபுணர் குழுவினர் அணைப் பகுதியில் இன்றுவிரிவான ஆய்வு மேற்கொண்டனர்.
குழுவில் இருந்த நீர்மூழ்கி வீரர்கள், அணையின் கீழ் பகுதியில் நீர்க் கசிவுஇருக்கிறதா, அணையின் ஸ்திரத்தன்மை உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்தினர்.நவீன கருவிகளைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
மேலும் அணையின் பல்வேறு பகுதிகளையும் அவர்கள் புகைப்படம் எடுத்தனர்.கேரள அரசின் இந்த செயலைக் கண்டித்து தென் மாவட்டங்கள் மற்றும் கோவைமாவட்டத்தில் விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம், சாலை மறியல்போராட்டத்தில் குதித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் தமிழக, கேரள எல்லைப் பகுதியில் உள்ள தமிழக எல்லைப்பகுதியான வாலையாறில், பெரும் திரளான விவசாயிகள் கூடியுள்ளனர்.
கேரளாவுக்கு செல்லும் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை தடுத்து நிறுத்தி அவர்கள்போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதேபோல பொள்ளாச்சி அருகே கேரள எல்லைப் பகுதியில் உள்ள கோவிந்தாபுரம்,நடுப்பனை, வீரப்பன் சத்திரம் ஆகிய இடங்களிலும் இதேபோல சாலை மறியல்போராட்டம் நடந்து வருகிறது.
தேனி மாவட்டத்தில் கேரளா நோக்கி செல்லும் சாலைகளிலும் சாலை மறியல்போராட்டத்தில் விவசாயிகள் குதித்துள்ளனர். இந்த சம்பவங்களால் அந்தப்பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது. அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications