ரூ2750க்கு இலவச டிவி-டெல்லி நிறுவனம் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின் கீழ் ஒரு டிவி ரூ. 2,750 என்றவிலையில் தயாரித்து வழங்க டெல்லி நோய்டாவைச் சேர்ந்த நிறுவனம் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

இலவச கலர் டிவி டிவிக்ளை வழங்குவது குறித்து முதல்வர் கருணாநிதிதலைமையிலான சட்டமன்றக் கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவின் 5வதுகூட்டம் நடைபெற்றது.

இதில், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், சட்டசபை காங்கிரஸ் தலைவர்சுதர்சனம், பாமக தலைவர் கோ.க.மணி, சிபிஎம் தலைவர் கோவிந்தசாமி, சிபிஐசிவபுண்ணியம், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் செல்வப் பெருந்தகை, புரட்சிபாரதம் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர்அப்துல் பாசித் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக் கூட்டத்தில் சென்னையைச் சேர்ந்த அகிரா நேஷனல் பிரைவேட் லிமிட்டெட்நிறுவனத்தின் ஒப்பந்தப்புள்ளி, சோதனைச் சான்றிதழை இணைக்காததால்நிராகரிக்கப்பட்டது.

மீதமுள்ள 12 நிறுவனங்கள் சமர்ப்பித்த தொழில்நுட்ப ஒப்பந்தப் புள்ளிகள் மதிப்பீடுசெய்யும் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன. விலைப்புள்ளிகள்புதன்கிழமை மாலை 5 மணிக்குத் திறக்கப்பட்டன.

அதில் ஜெனஸ் எலக்ட்ரோ டெக் லிட், டெல்லி, டான்டம் எலக்ட்ரானிக்ஸ், சென்னை,டிராபிக் கம்ப்யூட்டர் சென்னை ஆகியவற்றின் விலைப் புள்ளிகள் (விலை அதிகம்இருந்ததால்) நிராகரிக்கப்பட்டன.

தகுதியுள்ள 9 ஒப்பந்தக்காரர்களின் விலைப்புள்ளிகள் அந்தந்த நிறுவனங்களின்முன்னிலையில் திறக்கப்பட்டன. அவற்றின் விவரம்:

1. டிக்சன் டெக்னாலஜிஸ், நோய்டா, ரூ. 2,750
2. ஏர்விஷன் இந்தியா பிரைவேட் லிமிடெட், நோய்டா, ரூ. 2789.70
3. எல்.பி. எலக்ட்ரானிக்ஸ், காஸியாபாத், ரூ. 2,899
4. வீடியோகான் கம்யூனிகேஷன்ஸ் லிமிடெட், ரூ. 2,945.
5. கேவின் இன்போடெக் பிரைவேட் லிமிடெட், நோய்டா, ரூ. 2952.01
6. மிர்க் எலக்ட்ரானிக்ஸ், மும்பை, ரூ. 2965
7. கிச்சன் அப்ளையன்ஸஸ் லிமிடெட், பெங்களூர் மற்றும் அப்லிங்க் காம் இந்தியா
லிமிடெட், பெங்களூர், ரூ. 2,998
8. எல்.ஜி. எலக்ட்ரானிக்ஸ், ம்பை, ரூ. 3099.70
9. சான்யோ பிபிஎல் லிமிடெட், பெங்களூர், ரூ. 3,215.13

இவற்றில் குறைந்த விலையைக் குறிப்பிட்ட டிக்ஸன் நிறுவனத்தின் பிரதிநிதிகளைஅழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு டிவி பெட்டிக்கான இறுதி விலையைநிர்ணயம் செய்த பின்னர், மற்ற ஒப்பந்தகாரர்களிடம் இறுதி விலைப் புள்ளிக்குவழங்க ஒப்புதல் பெற்று,

எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து எத்தனை எண்ணிக்கையை கொள்முதல்செய்யலாம் என்பது குறித்து 24ம் தேதி காலை 11.30 மணிக்கு குழு கூடி முடிவுசெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+