அமெரிக்கா-தாய்ப்பால் கொடுத்து போராட்டம்
பர்லிங்டன்:விமானத்தில் அமர்ந்தபடி குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுத்த பெண்ணை விமானஊழியர்கள் இறக்கி விட்டதைக் கண்டித்து, அமெரிக்காவின் முக்கிய நகரங்களில்சம்பந்தப்பட்ட விமான நிறுவன அலுலகங்கள் மன்பு தாய்ப்பால் கொடுத்து பெண்கள்போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.
அக்டோபர் 13ம் தேதி பர்லிங்டன் நகரிலிருந்து செல்லும் டெல்டா ஏர்லைன்ஸ்விமானத்தில் பயணிப்பதற்காக 27 வயதாகும் எமிலி கில்லெட் என்ற பெண் தனதுகணவர் மற்றும் கைக்குழந்தையுடன் விமானத்தில் அமர்ந்திருந்தார்.
விமானம் கிளம்ப கால தாமதம் ஆன நிலையில், குழந்தை பசியில் அழ ஆரம்பித்தது.இதையடுத்து தனது குழந்தைக்குத் தாய்ப் பால் கொடுக்க ஆரம்பித்தார் எமிலி.
கைக் குழந்தைக்கு ஒரு தாய் பால் கொடுப்பதை யாரும் ஆபாசாமாக பார்க்கவும்மாட்டார்கள், அதை எதிர்க்கவும் மாட்டார்கள். ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தஎமிலியும் அதுபோலவே மறைவாக அமர்ந்து பால் கொடுத்தார். ஆனால் அந்தவிமானத்தில் இருந்த பணிப் பெண்கள் ஒரு போர்வையுடன் அங்கே விரைந்துவந்தனர்.
இதை வைத்து உங்களையும் குழந்தையையும் மூடிக் கொள்ளுங்கள் என்றுகூறியுள்ளனர். போர்வையைப் போட்டு குழந்தையை மூடினால் அதற்கு மூச்சுத்திணறும் என்று கூறிய எமிலி அதை வாங்க மறுத்து விட்டார்.
அவ்வளவுதான், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்து கொண்டதாக கூறி பால்கொடுத்துக் கொண்டிருந்த எமிலியையும், அவரது கணவரையும் வலுக்கட்டாயமாகவிமானத்திலிருந்து இறக்கி விட்டுள்ளனர் அந்த ஊழியர்கள்.
அவமானத்தால் கூனிக் குறுகிப் போன எமிலி அப்போதைக்கு எதுவும் சொல்லாமல்கீழிறங்கியுள்ளார். ஆனால் இதுகுறித்து மனித உரிமை அமைப்பிடம் புகார்கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்த தகவல் பரவியதும் அமெரிக்க பெண்கள் அமைப்புகள்கொந்தளித்துவிட்டன. குழந்தைக்குப் பால் கொடுப்பதைக் கூட ஆபாசமாக, அநாகரீகசெயலாக கருதுவதா?
எப்படிப்பட்ட மோசமான மனிதனும் கூட இதை ஆபாச கண்ணோட்டத்தோடு பார்க்கமாட்டான். ஆனால் டெல்டா ஏர்லைன்ஸ்காரர்கள் இவ்வளவு அசிங்கமாக நடந்துகொண்டுள்ளனரே என்று பொங்கிவிட்டனர்.
டெல்டா நிறுவனத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் முக்கியநகரங்களில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் அலுவலகங்கள் முன் பெண்கள் தங்களதுகைக்குழந்தைகளுடன் சென்று பால் கொடுத்து நூதனப் போராட்டத்திலும்ஈடுபட்டனர்.
தாய்மையை மதிக்கிறோம், தெரியாமல் தவறு நடந்து விட்டது. மன்னியுங்கள் என்றுஇப்போது டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications