மாணவி சுகன்யா கற்பழிக்கப்படவில்லை
ஓமலூர்:சேலம் மாவட்டம் ஓமலூர் பாத்திமா மகளிர் மேல்நிலைப்பள்ளி கிணற்றில் பிணமாகக்கிடந்த பிளஸ்டூ மாணவி சுகன்யா, கற்பழிக்கப்படவில்லை என பிரேதப்பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.
பெண்ணாகரத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி சுகன்யா, ஓமலூர் பாத்திமா மகளிர்மேல் நிலைப்பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்தார். சமீபத்தில் அவரது இறந்தஉடல் பள்ளி வளாக கிணற்றில் மிதந்தது.
இதனால் ஓமலூரில் பெரும் பதட்டம் ஏற்பட்டது. ஊர் மக்கள் பள்ளிக்குள் நுழைந்துபள்ளிக்கூடத்தை சூறையாடினர். சுகன்யா கற்பழிக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந் நிலையில் சுகன்யாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை விவரம்வெளியாகியுள்ளது. ஓமலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீரா, பன்னீர் செல்வம்,கஸ்தூரி திலகம், சானாபாய் உள்ளிட்டோர் அடங்கிய குழு சுகன்யாவின் பிரேதப்பரிசோதனையை நடத்தியது.
இந்த பரிசோதனை வீடியோவில் படமாக்கப்பட்டது. சுகன்யாவின் வயிறு, கல்லீரல்,மூளை உள்ளிட்ட பகுதிகள் கோவையில் உள்ள தடவியல் துறையின் ரசாயனப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
மேலும் சுகன்யா கற்பழிக்கப்பட்டாரா என்பது குறித்து சேலத்திள்ள பரிசோதனைக்கூடத்தில் சோதிக்கப்பட்டன. தற்போது பிரேதப் பரிசோதனை முடிந்து அதன்அறிக்கையை போலீஸாரிடம் டாக்டர்கள் ஒப்படைத்துள்ளனர்.
அதில், மாணவி சுகன்யா நீரில் மூழ்கி இறந்துள்ளதாகவும், அவர்கற்பழிக்கப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சுகன்யா கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் எனகருதப்படுகிறது.
போலீஸ் காவலில் பள்ளி ஊழியர்கள்: இதற்கிடையே கைது செய்யப்பட்டுநீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்ட பள்ளி ஊழியர்கள் அருள்நாதன்மற்றும் குமார் ஆகியோரை போலீஸார் தங்களது காவலில் எடுத்து விசாரித்துவருகின்றனர்.
இதற்கிடையே, சுகன்யா மர்மச்சாவு தொடர்பான வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன்வழங்கக் கோரி பள்ளித் தலைமை ஆசிரியை உள்ளிட்ட 3 பேர் தாக்கல் செய்தமனுக்களை சேலம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இந்த வழக்கில் தாங்கள் கைது செய்யப்படக் கூடும் என்பதால் முன் ஜாமீன் கோரிதலைமை ஆசியை மேரி அல்போன்சா, விடுதி வார்டன் லூர்து மேரி, வேதியியல்ஆசிரியை மேரி பிளாரன்ஸ் (இவர் திட்டியதால்தான் மாணவி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது) ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி கிருஷ்ணராஜ் அவற்றை தள்ளுபடி செய்தார்.இதேபோல பள்ளிக்கூடத்தை சூறையாடியதாக கைது செய்யப்பட்ட 12 பேரின்சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications