ஈராக்கில் தொடரும் தற்கொலை தாக்குதல்கள்
பாக்தாத்:ஈராக் தலைநகர் பாக்தாத் அருகே ஷியா முஸ்லீம்கள் வசிக்கும் பகுதியில் நடந்தபயங்கர தற்கொலைப் படைத் தாக்குதலில் 170 பேர் உயிரிழந்தனர். 200க்கும்மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈராக்கின்பல்வேறு பகுதிகளில் இன மோதல்கள் அதிகரித்து வருகின்றன. சதாம் சார்ந்த சன்னிமுஸ்லீம் பிரிவினரும், ஷியா முஸ்லீம்களும் ஆங்காங்கு மோதி வருகின்றனர்.
இந் நிலையில் ஷியா முஸ்லீம்கள் அதிகம் வசிக்கும் சதர் என்ற நகரில் நேற்று பயங்கரதாக்குதல் நடந்தது. மாலை 3 மணியளவில் ஜமீலா மார்க்கெட் பகுதியில் ஒரு காரில்வந்த நபர் அந்தக் காரை வெடிக்கச் செய்தார்.
அதற்கடுத்த கால் மணி நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு கார் குண்டுகள் அல் ஹேய்மார்க்கெட், அல் ஷாகிதீன் சதுக்கம் ஆகிய இடங்களில் வெடித்தன. இவற்றையும்அந்தக் கார்களில் வந்தவர்களே வெடிக்கச் செய்தனர்.
அதேசமயம், இந்த இரு இடங்களிலும் சரமாரியாக ராக்கெட் குண்டு தாக்குதலும்நடத்தப்பட்டது. கார் குண்டுவெடிப்பு மற்றும் ராக்கெட் தாக்குதலால் அந்தப் பகுதியேசின்னாபின்னமாகிப் போனது.
எங்கு பார்த்தாலும் உடல்கள் சிதறிக் காணப்படுகின்றன. இந்த பயங்கர தாக்குதலில்170 பேர் இறந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தால் ஆத்திரமடைந்த ஷியா முஸ்லீம்கள் பாக்தாதில் துப்பாக்கிகளுடன்வன்முறையில் இறங்கினர். சன்னி முஸ்லீம்களுக்குச் சொந்தமான மசூதி ஒன்றில்அவர்கள் ராக்கெட் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர்பலியானார், 15 பேர் காயமடைந்தனர்.
சதர் நகர் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது, ஷியா, சன்னி இன மோதல் பெரியஅளவில் வெடிக்கும் அபாயமும் உருவாகியுள்ளது.
இதனால் பாக்தாத் உள்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது. ஈராக் போர் தொடங்கிய பின்னர் நடந்துள்ள மிகப் பெரியதாக்குதல் சம்பவம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சதாம் உசேனுக்கு தண்டனை விதிக்கப்பட்டவுடன் இந்த சதர் நகரில்தான் முதல்முறையாக ஷியா முஸ்லீம்கள் பெருமளவில் திரண்டு மகிழ்ச்சிப் பேரணி நடத்தினர்.இதனால் பழிவாங்கும் வகையில் இந்த தாக்குதல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
மீண்டும் தற்கொலை தாக்குதல்: 22 பேர் பலி
இந் நிலையில் ஈராக்கில் இன்று மீண்டும் ஒரு தற்கொலைப் படைத் தாக்குதல் நடந்துள்ளது. அதில் 22 பேர்பலியாகினர்.
வடக்கு ஈராக்கில் உள்ள தல்-அபார் என்ற நகரில் இந்த குண்டுவெடிப்பு நடந்தது. காரில் வெடிகுண்டுகளுடன்வந்த நபர்கள் அங்குள்ள திறந்தவெளி மார்க்கெட்டில் காரை வெடிக்கச் செய்தனர். இதில் 22 பேர் உயிரிழந்தனர்.30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். சிரியா எல்லையில் இந்த நகர் உள்ளது.
அல்-கொய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்புள்ள தீவிரவாதிகளே இத் தாக்குத நடத்தியதாகத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications