நான் இருந்திருந்தால்.. ஜெ சவால்
சென்னை:அதிமுக ஆட்சி இப்போது தமிழகத்தில் இருந்திருந்தால் முல்லைப் பெரியாறுஅணையில் நிச்சயம் 142 அடி தண்ணீரை தேக்கி வைக்க உத்தரவிட்டிருப்பேன் என்றுஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எனது சந்தேகங்களை கேள்விகளாக்கிஅந்த அறிக்கையில் கேட்டிருந்தேன். எனது சந்தேகங்களை நிவர்த்திக்கும் பணியில்கருணாநிதி அக்கறை செலுத்தவில்லை.
மாறாக, கேரள அரசு சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட சட்டத் திருத்தம்கொண்டு வந்ததேன்? அப்போது நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீர்கள்? அப்போதுசும்மா இருந்து விட்டு இப்போது அறிக்கை விடலாமா என்று என்னைப் பார்த்துக்கேட்கிறார்.
கேரள சட்டசபையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்த நாள் 15.3.2006. அதைநடைமுறைக்குக் கொண்டு வந்த நாள் 18.3.2006.
இவ்வாறு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நடைமுறைப்படுத்தவும் செய்த 9வதுநாளில், அதாவது 27.3.2006 அன்று கேரள சட்டசபையில் சட்டத் திருத்தவும்செய்வதும், அதனை நடைமுறைப்படுத்துவதும் அரசியலமைப்புச் சட்டத்திற்குவிரோதமானது என்று எனது தலைமையிலான அதிமுக அரசின் சார்பில்உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அதன் பின்னர் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டன.நியாயமாகப் பார்த்தால் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த கருணாநிதிதான் முல்லைப்பெரியாறு அணை குறித்துத் தீவிர கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.
அப்போதும், இப்போதும் கேரள அரசு அளவுக்கு முல்லைப் பெரியாறு அணைப்பிரச்சினையில் தீவிரம் காட்டாமல் சுணக்கம் காட்டுவது ஏன்?
தொடர்ந்து எங்களது ஆட்சி நடைபெற்றிருக்கும் பட்சத்தில், இப்படியொரு கன மழை,வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டிருந்தால், ஷட்டர்களை இறக்கி 142 அடி வரைதண்ணீரைத் தேக்கி வைக்க நிச்சயம் நடவடிக்கை எடுத்திருப்போம் என்பதைஉறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முல்லைப் பெரியாறு அணை காவல் பணியில் கேரள அரசு 31 பேரை நுழைத்துவிட்டது. இது கிட்டத்தட்ட ஆக்கிரமிப்பு போன்ற செயலாகும். கேரள அரசுஅதிகாரிகள் பெரியாறு அணையில் வைக்கப்பட்டிருந்த நீர்மட்ட அளவுகோலைஅகற்றி, தண்ணீருக்குள் போட்டு விட்டுச் சென்றுள்ளனர்.
இந்த அளவுகோல் தமிழக பொதுப்பணித் துறையினரால் வைக்கப்பட்டது. மேற்கண்டஎந்த சம்பவத்திற்கும், கருணாநிதி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரியவருகிறது.
இதன் உச்சகட்டமாக கேரள மாநில அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி, 142 அடிவரை நீர்மட்டத்தை உயர்த்த அனுமதிக்க முடியாது என்று கேரள முதல்வர்அச்சுதானந்தன் பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்துள்ளார்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லியில் வருகிற 29ம் தேதி நடைபெறவுள்ளகூட்டத்தில் தமிழகத்திற்கு எந்தவிதமான நல்ல தீர்வு எட்டப்படும் என்று நாங்கள்கேள்வி எழுப்பினால் அதில் என்ன தவறு? இதில் என்ன அநாகரீகம் நேர்ந்திருக்கிறது?
தனது அரசை ஆதரிக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மனம் நோகக் கூடாது.நோகடித்தால் கேரளாவில் அது எதிரொலிக்கும். தனது ஆட்சிக்குப் பாதிப்பு ஏற்படும்என பயப்படுகிறார் கருணாநிதி.
இந்தப் பயம் காரணமாகவே, தமிழகத்தின் தென் மாவட்ட விவசாய மக்களின் உயிர்பிரச்சினையில் உடனடியாக முடிவெடுக்காமல் அசட்டையாக இருக்கிறார். முல்லைப்பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்திற்குத் துரோகம் செய்வதை அவர்உடனடியாக நிறுத்த வேண்டும். இனியாவது இப்பிரச்சினையில் தீவிர கவனம்செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
-நேரில் செல்வதை ரத்து செய்தது காங்:
இதற்கிடையே முல்லைப் பெரியாறு அணைக்கு நேரில் சென்று ஆய்வு செய்யும்திட்டத்தை காங்கிரஸ் கட்சி திடீரென கைவிட்டுள்ளது.
அணைக்கு காங்கிரஸ் குழு நேரில் சென்று ஆய்வு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.இக்குழுவில் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள்உள்ளிட்டோர் இடம் பெறுவர் என்றும்,
இந்த ஆய்வுக்குப் பின்னர் டெல்லி சென்று பிரதமர் மனமோகன் சிங், காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி ஆகியோரை நேரில் சந்தித்து அணை விவகாரம் தொடர்பாகதமிழகத்தின் நியாயத்தை எடுத்துச் சொல்லப் போவதாகவும் சட்டசபை காங்கிரஸ்தலைவர் சுதர்சனம் கூறியிருந்தார்.
ஆனால் தற்போது இந்தத் திட்டத்தை அம்போவென விட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.
தமிழக காங்கிரஸ் இந்த விவகாரத்தை கையில் எடுத்தால் கேரளத்தில் காங்கிரசுக்குதர்மசங்கடம் ஏற்படும் என டெல்லி தலைமை கூறியதால் தனது திட்டத்தைவிட்டுவிட்டது தமிழக காங்கிரஸ்.
சூப்பர் கட்சிப்பா....
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications