ராஜபக்ஷே: தமிழக மேயர்கள் புறக்கணிப்பு
சென்னை:டேராடூன் நகரில் 26ம் தேதி இலங்கை அதிபர் ராஜபக்ஷே தொடங்கி வைக்கும் ஆசியமேயர்கள் மாநாட்டில் தமிழக மேயர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்றுதெரிவிக்கப்பட்டுள்ளது.
டேராடூனில் ஆசிய மேயர்கள் மாநாடு 26ம் தேதி தொடங்கி 3 நாட்கள்நடைபெறுகிறது. இம்மாநாட்டை ராஜபக்ஷே தொடங்கி வைக்கிறார். 32 நாடுகளைச்சேர்ந்த 40 மேயர்கள் இதில் பங்கேற்கின்றனர்.
இலங்கையில் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் நிலையில் ராஜபக்ஷேமாநாட்டைத் தொடங்கி வைப்பதால், இம் மாநாட்டை தமிழக மேயர்கள் புறக்கணிக்கவேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியிருந்தார். மேலும் பல்வேறுதரப்பினரும் ராமதாஸின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
தமிழகத்தில் மொத்தம் 6 மேயர்கள் உள்ளனர். இவர்களில் சென்னை, மதுரை, சேலம்,திருநெல்வேலி மேயர்கள் திகவைச் சேர்ந்தவர்கள். கோவை, திருச்சி மேயர்கள்காங்கிரஸைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் 6 பேரும் டேராடூன் மேயர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார்கள்எனத் தெரிய வந்துள்ளது.
சென்னையில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தீவிரமாக இருப்பதால் தன்னால்மாநாட்டுக்குப் போக முடியாது என சென்னை மேயர் மா.சுப்ரமணியன்தெரிவித்துள்ளார்.
இதே கருத்தையே மதுரை, சேலம், நெல்லை மேயர்களும் தெரிவித்துள்ளனர். திருச்சிமேயர் சாருபாலா தொண்டமான் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டிஇருப்பதால் மாநாட்டுக்குப் போக முடியாது என தெரிவித்துள்ளார்.
இதேபோல கோவை மேயர் காலனி வெங்கடாச்சலமும், 30ம் தேதி மாநாகாரட்சிக்கூட்டம் கூடவுள்ளதால், மாநாட்டுக்கு வர இயலாத நிலையில் உள்ளதாகக்கூறியுள்ளார்.
மொத்தத்தில் 6 மேயர்களும் டேராடூன் மாநாட்டுக்குப் போகப் போவதில்லை என்பதுஉறுதியாகியுள்ளது. ராஜபக்ஷே எதிர்ப்பு என்பதை வெளிப்படையாகசொல்லாவிட்டாலும் கூட, அந்த நோக்கில்தான் 6 பேரும் மேயர் மாநாட்டைப்புறக்கணித்திருப்பதாக கூறப்படுகிறது.
புலிகள் தாக்குதலில் 7 ராணுவ வீரர்கள் பலி:
இந் நிலையில் இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் 7 ராணுவவீரர்கள் கொல்லப்பட்டனர். ராணுவம் நடத்திய ராக்கெட் வீச்சில் ஒரு தமிழ் மாணவிபரிதாபமாக பலியானதையடுத்து புலிகள் இந்தத் தாக்குதலை நடத்தினர்.
கிழக்கில் உள்ள மட்டக்களப்பில் பதுளை வீதி என்ற இடத்திலிருந்து ராக்கெட்தாக்குதலை ராணுவம் மேற்கொண்டது. இவர்களுக்கு துணையாக அம்பாறை அருகேஉள்ள வெட்டுவான் முகாமிலிருந்து ராணுவம் ராக்கெட் வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த ராக்கெட்டுகள் வீடுகள் மீது விழுந்து வெடித்தன. இதில் அருட்செல்வி என்ற 15வயது பள்ளி மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது சகோதரிகளானகலைச்செல்வி (வயது 20), நீருஷா (வயது 7), அண்ணன் அருள் ராஜா (20)ஆகியோர் காயமடைந்தனர்.
ராணுவப் பகுதியில் தங்கியிருந்த இவர்கள் 3 மாதங்களுக்கு முன்புதான் இப்பகுதிக்குஇடம் பெயர்ந்து வந்தனர்.
ராணுவத்தின் இத்தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விடுதலைப் புலிகள்பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டனர். இதில் 7 ராணுவ வீர்ரகள் கொல்லப்பட்டனர்.புலிகள் தரப்பில் ஒருவர் பலியானார்.
இத்தகவலை விடுதலைப் புலிகள் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான ராசையாஇளந்திரையன் தெரிவித்தார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications