நாடாளுமன்றத்தில் எம்ஜிஆர் சிலைக்கு அனுமதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் தமிழக தல்வரும், அதிமுக நிறுவனருமானஎம்.ஜி.ஆரின் சிலையைத் திறக்க நாடாளுமன்ற சிலைகள் குழு அனுமதிஅளித்துள்ளது. இதேபோல முரசொலி மாறன் சிலைக்கும் அனுமதிவழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலையை நிறுவ அதிமுக சார்பில்நடவடிக்கை எடுக்கப்பட்டது. சிலையை நிறுவ அனுமதி கிடைத்தும் கூட சிலைதிறப்பு விழாவை முதல்வர் கருணாநிதி தனது செல்வாக்கைப் பயன்படுத்திபிரதமரையும் சோனியாவையும் மிரட்டி தடுத்து விட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், முரசொலி மாறன் சிலையை திறக்க மத்திய அரசை மிரட்டிப் பணியவைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டியிருந்தார். இந் நிலையில், மக்களவைசபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையிலான நாடாளுமன்ற சிலைகள் குழுவின்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன்ஆகியோரது சிலைகளை நாடாளுமன்ற வளாகத்தில் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

டிசம்பர் 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் சிலைகள் திறப்பு விழாவை வைத்துக்கொள்ளலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர். சிலை கடந்த 6 மாதமாக திறப்புக்காக காத்திருப்பதால் மதலில்எம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படு எனத் தெரிகிறது. அதாவது டிசம்பர் 5ம் தேதிஎம்.ஜி.ஆர். சிலை திறக்கப்படும். 8ம் தேதி மாறன் சிலை திறக்கப்படும்.

எம்.ஜி.ஆர். சிலை தற்போது வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற நூலக வளாகத்தில்நிறுவப்படும். மாறன் பெரும்பாலும் மேலவை (ராஜ்யசபா) உறுப்பினராகவேஇருந்ததால் அவரது சிலை மேலவை வளாகத்தில் நிறுவப்படும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகருக்கு ஜெ. நன்றி:

இந் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை திறக்க அனுமதிவழங்கியதற்காக லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். சிலைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று சபாநாயகர் தலைமையில்நேற்று நடந்த கூட்டத்தில் குரல் எழுப்பிய தெலுங்குதேச நாடாளுமன்றக் குழுத்தலைவர் எர்ரன் நாயுடு, சமாஜ்வாதி கட்சித் தலைவர் பேராசிரியர் ராம் கோபால்யாதவ் ஆகியோருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிலையைத் திறந்து வைக்க இசைவு தெரிவித்துள்ள குடியரசுத் துணைத் தலைவர்பைரான் சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோருக்கும் என உளங்கனிந்தநன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

ஜெ.வுக்கு தலைவர்கள் கண்டனம்

இந் நிலையில் முரசொலி மாறனுக்கு நாடாளுமன்றத்தில் சிலை வைப்பது தொடர்பாககருத்து சொல்ல ஜெயலலிதாவுக்கு தகுதியே கிடையாது என திமுக கூட்டணியைச்சேர்ந்த பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி:

நீண்ட காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் மாறன், வர்த்தக அமைச்சராகஇருந்தபோது தோஹா மாநாட்டில் இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டுசென்றவர். அவரது சிலையை நாடாளுமன்ற வளாகத்தில் வைப்பதில் தவறே இல்லை.இதை எதிர்ப்பது அநாகரீகமானது.

இ.கம்யூனிஸ்ட் செயலாளர் தா.பாண்டியன்:

இதையெல்லாம் பிரச்சினையாக இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதாகிளப்புவது வேதனைக்குரியது. சிலை வைப்பதா, வேண்டாமா என்பதை முடிவுசெய்ய வேண்டியது நாடாளுமன்றக் குழுதான். ஜெயலலிதா அல்ல.

இ.கம்யூ பொலிட்பீரோ உறுப்பினர் நல்லகண்ணு:

எம்.ஜி.ஆருக்கு சிலை வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கேட்கலாம், தவறில்லை.ஆனால் அதை விட்டு விட்டு மாறனுக்கு சிலை வைக்கக் கூடாது என்று சொல்வதுதவறானது. மாநில உரிமைகளுக்காக மத்தியில் குரல் கொடுத்தவர் மாறன்.தமிழ்நாட்டின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டவர். அவருக்கு சிலைவைப்பதை ஜெயலலிதா விமர்ச்திருப்பது கண்டனத்துக்குரியது.

ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள் எம்.எல்.ஏ.): தமிழகத்திலிருந்துடெல்லிக்குச் சென்ற அரசியல் தலைவர்களில், அறிவாற்றல் காரணமாகஅங்கீகரிக்கப்பட்டவர் மாறன். மாநில சுயாட்சி குறித்த அவருடைய சிந்தனைகள்இந்தியா ஒரு குடியரசாக தொடரும் வரை பொருந்தக் கூடியவை. இந்தியாவின்உரிமைகளுக்ாக தோகா மாநாட்டில் அவர் குரல் கொடுத்தார். அவரால்தான் இந்தியவிவசாயிகள் இன்று பல உரிமைகளைப் பெற்றுள்ளனர். இலக்கியத்திலும் அவர் சிறந்தபங்களிப்பு செய்துள்ளார்.

ஆற்றல் மிக்க அமைச்சராக, கலைஞராக, சிந்தனையாளராக தேசிய அளவிலும்,சர்வதேச அளவிலும் இந்தியாவின், தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டியவர்.

அவருக்கு சிலை வைக்காவிட்டால வேறு யாருக்குத்தான் சிலை வைக்க முடியும்?

காதர் மொஹைதீன் (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்):

மாறனுக்கு சிலை வைக்கக் கூடாது என்று கூற ஜெயலலிதாவுக்கு தகுதியே கிடையாது.மாறன் உலக அளவில் தமிழகத்தின் பெருமையை உயர்த்தியவர். அரசியல்காழ்ப்புணர்ச்சி காரணமாக சிலை வைப்பதை எதிர்க்கிறார் ஜெயலலிதா. தமிழனுக்குசிலை வைப்பதை தமிழனால்தான் உணர முடியும். ஜெயலலிதாவால் உணர முடியாது.

எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் (காங்.): தகுதியைப் பார்த்துத்தான் சிலை வைக்கநாடாளுமன்ற சிலைகள் குழு முடிவு செய்யும். அங்கு எத்தனையோ சிலைகள்உள்ளன. மாறன் சிலையை வைப்பதில் என்ன தவறு?

வெற்றி கொண்டான் (திமுக பேச்சாளர்): நாடாளுமன்ற வளாகத்தையேமிதிக்காதவர்களுக்குக் கூட அங்கு சிலைகள் உள்ளன. ஆனால் கால் நூற்றாண்டுகாலம் அங்கேய வாழ்ந்து வரலாறு படைத்த மாறனுக்கு சிலை வைக்கக் கூடாதா?

இந்தியாவின் விலை மதிக்க முடியாத பொக்கிஷம் மாறன். மாநில உரிமைகளுக்காககுரல் கொடுத்தவர். அப்படிப்பட்டவரின் பெயரை உச்சரிக்கவோ, அவரது செருப்பைத்தொடக் கூடவோ தகுதி பெறாதவர் ஜெயலலிதா.

ஜெயலலிதா என்ன செய்தார்? நடிகையாக இருந்தார், ஆபாச படங்களில் நடித்தார்.அரைகுறை உடையில் நடனம் ஆடினார். இளமை போனதும் அரசியலுக்கு வந்தார்.கல்யாணம் செய்யாமலேயே சோபன்பாபுவுடன் வாழ்ந்ததை பத்திரிக்கையில்எழுதினார். இந்த உறவு பற்றி கோயிங் ஸ்டடி என்று சொன்னவர் ஜெயலலிதா.

இப்படிப் பல பேருடன் வாழ்ந்தவர். அவர்களது பெயரைச் சொன்னால் வாக்காளர்பட்டியல் போல நீண்டு கொண்டே போகும். இத்தனைக்கும் பிறகு செல்வி என்றுபோட்டுக் கொள்கிறார். நாட்டின் தேவைக்காக அரசியலுக்கு வந்தவர் மாறன்.ஜெயலலிதா, சிலரின் தேவைகளுக்காக அரசியலுக்கு அறிமுகமாகி சொந்தத்தேவைக்காக அலைந்தவர் அல்ல என்று கூறியுள்ளார் வெற்றிகொண்டான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+