கவுத்துருங்கோ-கருணாநிதிக்கு சு.சுவாமி யோசனை
சென்னை:முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க கேரளஅரசு தவறினால், மத்திய அரசுக்குக் கொடுத்து வரும் ஆதரவை கருணாநிதி வாபஸ்பெற வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி யோசனைகூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உச்சநீதிமன்றமே 142 அடி வரை அணையில் நீர் தேக்கலாம் என கூறி விட்டது.அப்படி இருக்கையில், தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்த ஏன் தயங்குகிறதுஎன்பது புரியவில்லை.
நெய்வேலி அனல் மின் கழக பங்குகளை தனியாருக்கு விற்றால் ஆட்சிக்கு வழங்கும்ஆதரவை திமுக வாபஸ் பெறும் என கருணாநிதி முன்பு மிரட்டி மத்திய அரசைப்பணிய வைத்தார்.
கருணாநிதியின் மிரட்டலுக்குப் பணிந்த மத்திய அரசும், தனது முடிவை வாபஸ்பெற்றது.
தற்போது ஐந்து தென் மாவட்ட விவசாயிகளின் நலனுக்காக ஏன் மறுபடியும் மத்தியஅரசை திமுக மிரட்டக் கூடாது?
சில ஆயிரம் என்.எல்.சி. ஊழியர்களுக்காக அவ்வளவு தூரம் போராடிய கருணாநிதி,2 லட்சம் தென் மாவட்ட விவசாயிகள் நலனுக்காக ஏன் இப்படி செய்யக் கூடாது?ஆனால் அவர் விவசாயிகள் குறித்துக் கவலைப்படுவது போலவே தெரியவில்லை.
29ம் தேதி டெல்லியில் நடைபெறும் பேச்சுவார்த்தையில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்அடிப்படையில், கேரள அரசு அணையின் உயரத்தை அதிகரிக்க ஒத்துக்கொள்ளாவிட்டால் ஆட்சிக்கு தரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும் என பிரதமரிடம்கருணாநிதி திட்டவட்டமாக தெரிவிக்க வேண்டும்.
சமீபத்தில் சென்னையில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நான் கலந்துகொண்டபோது, இந்தப் பிரச்சினை தொடர்பாக மத்திய அரசுக்குத் தரும் ஆதரவைஜனநாயக முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வாபஸ் பெறும் என என்னிடம்உறுதியளித்தார் கருணாநிதி. ஆனால் அதன்படி பிரதமருக்கு அவர் கடிதம் எழுதினாராஎன்பது தெரியவில்லை.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி அளவுக்கு தண்ணீரைத் தேக்கி வைக்க தமிழகஅரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனவரி 14ம் தேதி பொங்கல் தினத்தன்று,ஜனதாக் கட்சி சார்பில், மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக விலக வேண்டும் என்றுவலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும்.
நேற்று என்னை கேரளாவைச் சேர்ந்த பல எம்.பிக்களும், அம் மாநில நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் நாடாளுமன்றத்தில் சந்தித்து இந்தப் பிரச்சினை குறித்துப் பேசினர்.அப்போது, சோனியா காந்தியின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப் பிரச்சினையைகமுக்கமாக திமுக அரசு முடித்து விடும் என்றனர்.
அவர்கள் சொன்னபடி கருணாநிதி நடந்து கொண்டால் அது தமிழகத்திற்கும்,விவசாயிகளுக்கும் செய்யும் மிகப் பெரிய துரோகமாகும் என பேசி முடித்தார் சுவாமி.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications