விமானம் லேட் ஆனால் இனி சாப்பாடு ப்ரீ!
டெல்லி:குறைந்த கட்டணங்களில் விமான சேவையை நடத்தும் நிறுவனங்கள், தங்களதுவிமானங்கள் புறப்படுவதும், வருவதும் தாமதமானால் பயணிகளுக்கு இலவசமாகஉணவு, குளிர்பானம் போன்றவறறை வழங்க வேண்டும் என விமான போக்குவரத்துஇயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
போட்டியை சமாளிக்க விமான நிறுவனங்கள் கட்டணக் குறைப்புப் போட்டியில்குதித்துள்ளன. குறைவான கட்டணம் என்பதால் இந்த விமானங்களில் பயணிக்கபெரும்பாலானவர்கள் ஆசைப்படுகின்றனர்.
ஆனால் கட்டணத்தைக் குறைத்து விட்டு, விமான நேரங்களை இஷ்டத்திற்கு மாற்றிஅமைப்பது, நினைத்தால் ரத்து, அநியாயத்துக்கு கால தாமதம், டிக்கெட்டை கேன்சல்செய்தால் காசை திருப்பித் தராமல் பயணிகளுக்கு மொட்டை போடுவது எனபயணிகளை வதைத்து வருகின்றன இந்த தனியார் விமான நிறுவனங்கள்.
இதனால் பயணிகள் ஒன்று திரண்டு இந்த விமான நிறுவனங்களின் டிக்கெட்கெளண்டர்களை அடித்து நொறுக்கி சூறையாடுவது வழக்கமாகிவிட்டது. சென்னைமீனம்பாக்கம் விமான நிலையத்தில் பல முறை ஏர்டெக்கான் அலுவலகம்பயணிகளால் சூறையாடப்பட்டுள்ளது.
மேலும் இந்த தனியார் விமானங்களில் உணவுப் பொருட்கள் இலவசமாகவழங்கப்படுவதில்லை. தண்ணீரைத் தவிர எல்லாவற்றையும் (சாக்லேட் உள்பட) காசுகொடுத்துத்தான் சாப்பிட வேண்டும். இதனால் பயணிகள் படும் அவதியை உணர்ந்த,விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அதற்கு முடிவு கட்ட முன்வந்துள்ளது.
விமானம் புறப்படுவதிலும், வருவதிலும் தாமதம் ஏற்பட்டால், குறைந்த கட்டணவிமான நிறுவனங்கள், பயணிகளுக்கு இலவசமாக சாப்பாடு தர வேண்டும் என்றுசம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர்டெக்கான் நிறுவன நிர்வாக இயக்குனர் கோபிநாத் கூறுகையில்,எங்களது விமானங்கள் 3 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால், பயணிகளுக்குஇலவசமாக ஒரு பயண டிக்கெட்டும், உணவும் தர முடிவு செய்துள்ளோம் என்றார்.
அதேபோல ஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானம் 2 மணி நேரத்திற்கு மேல் லேட்ஆனால், குளிர்பானம் மற்றும் ஏதாவது ஒரு உணவு வழங்கப்படுவதாக அந்தநிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications