மாறன்-ஜெவுக்கு கருணாநிதி வக்கீல் நோட்டீஸ்
சென்னை:முரசொலி மாறன் சிலை வைப்பது தொடர்பாகவும், அவரைப் பற்றியும் அவதூறாகப்பேசியவற்றை 7 நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவதூறுவழக்குத் தொடரப்படும் என கூறி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குமுதல்வர் கருணாநிதி வக்கீல் நிாேட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி சார்பில் அவரது வழக்கறிஞர் பிரகாசம் அனுப்பியுள்ளநோட்டீஸில்,
நாடாளுமன்றத்தில் எம்.ஜி.ஆர். சிலை வைப்பதை சதி செய்து விட்டார் என்றுஜெயலலிதா கூறியிருப்பதை பார்த்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்துள்ளார்.அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் உண்மையானவை அல்ல.
முரசொலி மாறன் சிலை பற்றி ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்துக்கள்கண்டனத்துக்குரிவை. மாறன் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதி ஆவார். தனதுஅறிவுக்கூர்மையாலும், அளப்பரிய சேவையாலும் உலக அரங்கில் இந்தியாவின்பெருமையை உயர்த்தியவர்.
இந்தியா மிகப் பெரிய வல்லரசாக வர வேண்டும் என்று விரும்பியவர். இதுஅனைவருக்கும் நன்கு தெரியும். அப்படிப்பட்ட ஒரு தலைவர் பற்றி அவதூறாகசொல்லியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
முரசொலி மாறனுக்கு சிலை வைப்பது தொடர்பாகவும், எம்.ஜி.ஆர். சிலையை தடுத்துவிட்டார் என்றும் அவதூறாக, உண்மைக்குப் புறம்பாக அறிக்கை வெளியிட்டுள்ளஜெயலலிதா தனது கருத்துக்களை 7 நாட்களில் வாபஸ் பெற வேண்டும்.
இல்லாவிட்டால் ஜெயலலிதா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும். இந்தவழக்கு தொடர்பான செலவுகளையும் அவர்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றுஅதில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications