தமிழகத்திலிருந்து மின்சாரம்-இலங்கை திட்டம்
கொழும்பு:தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் பெறுவதற்கான முயற்சிகளில் இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேஈடுபட்டுள்ளார்.
இன்று இந்தியா வரும் அவர் கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
பாக் ஜலசந்தி பகுதியில் இந்திய-இலங்கை கடற்படை கூட்டாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடலாம். இதுகுறித்து இந்தியாவுடன் பேசுவேன். இதன் மூலம் ஆயுத மற்றும் போதை மருந்து கடத்தலை தடுக்கவும், இருநாட்டு மீனவர்களின் பாதுகாப்பையும் அதிகரிக்கவும் முடியும்.
இலங்கையின் மின்சார பற்றாக்குறையை போக்க மின்சார துறையில் இந்திய முதலீட்டை கோரவுள்ளோம்.எப்போதும் இந்தியாவின் உதவியை எதிர் நோக்கியே இலங்கை உள்ளது.
தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம் வாங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் பேசுவேன். இதைதமிழக அரசுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்.
இந்தியா நம்முடைய அண்டை நாடு மட்டுமல்ல, நட்பு நாடும் கூட. தமிழகத்தில் உள்ள அனைவரும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக நான் கருதவில்லை என்றார் ராஜபக்சே.
பிரதமருடன் வைகோ சந்திப்பு:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை மதிமுக பொதுச் செயலாளர் சந்தித்து, இலங்கை விமானப்படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார்.
தனது 4 எம்பிக்களுடன் பிரதமரை சந்தித்து 30 நிமிடங்கள் பேசிய வைகோ, இலங்கை விமானப் படைவிமானிகளுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழர்களைக் கொல்வதற்கு பயிற்சி அளிப்பதாகவே அர்த்தமாகும்.எனவே இந்தப் பயிற்சி அளிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.
இந்த விஷயத்தில் தானே நேரில் தலையிட்டு கவனம் செலுத்துவதாக அப்போது வைகோவிடம் பிரதமர்உறுதியளித்தார்.
இதையடுத்துப் பேசிய வைகோ, இலங்கைக்கு அனுப்பப்படும் உணவுப் பொருட்கள்கொள்ளையடிக்கப்படுகின்றன. தமிழர்களுக்கு போய் சேராமல் தடுக்கப்படுகின்றன.யாழ்பாணத்தை இணைக்கும் ஏ-9 தேசிய நெடுஞ்சாலை திறக்கப்படவில்லை.ஆனால், திறந்து விட்டதாக இலங்கை அரசு பொய் கூறுகிறது. ஒரு லாரி லோடுமட்டுமே உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குதவறான தகவல்களை இலங்கை தருகிறது என்றார்.
இதற்கு மன்மோகன் சிங், இந்தியா அனுப்பும் உணவுப்பொருட்கள் அனைத்தும்யாழ்ப்பாண தமிழர்களுக்கு மட்டுமே. இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும்தாக்குதல் குறித்து இந்தியாவுக்கு வரும் அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன்பேசுகிறேன் என்று உறுதியளித்தார்.
இதையடுத்து பிரதமரிடம் வைகோ ஒரு மனு கொடுத்தார். அதில்,
இலங்கையில் சிங்கள இனவெறி அரசு தமிழ் இனத்தையே பூண்டோடு அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளது.இலங்கை அரசின் இந்த கொலைவெறி பிடித்த நடவடிக்கைகளை இந்தியா தடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 7 கோடி தமிழர்கள் தவிர உலகெங்கும் உள்ள தொப்புள் கொடி உறவுள்ள தமிழர்கள்அனைவரும் ஈழத் தமிழரின் துயரமான நிலை கண்டு வேதனை அடைந்துள்ளனர் என்றார்.
இந்தியா வரும் ராஜபக்சேவை எதிர்த்து வரும் 27ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் வைகோ உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி ஜந்தர் மந்தர் பகுதியை வைகோபார்வையிட்டார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ளநூற்றுக்கணக்கான மதிமுகவினர் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்கின்றனர்.
இவர்களை தங்க வைக்க டெல்லி கரோல்பாக் மற்றும் லோதி கார்டன் பகுதிகளில் 2கல்யாண மண்டபங்கள் புக் செய்துள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications