திருச்சியில் பிடிபட்ட 200 கிலோ ராட்சச முதலை
Subscribe to Oneindia Tamil
திருச்சி:திருச்சி அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் 12 அடி நீளமுள்ள ராட்சஷ முதலைபிடிபட்டது.
போலீசாரும், வனத்துறையினரும் மற்றும் தீயணைப்புப் படையினரும் நீண்ட நேரம்போராடி முதலையைப் பிடித்தனர்.
கன மழை காரணமாக திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் நீர் வெள்ளமாய்ஓடுகிறது.
இந் நிலையில் கல்லங்காட்டுப் பகுதி வயலில் 12 அடி நீள முதலை இருந்ததைஅப்பகுதி மக்கள் பார்த்து திடுக்கிட்டனர். இது குறித்து போலீசாருக்கு தகவல்தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருடன் போலீசார் அங்குவந்தனர். நீண்ட நேரம் போராடி அந்த ராட்சச முதலையைப் பிடித்து கயிற்றி கட்டிஎடுத்துச் சென்றனர்.
இந்த முதலையின் எடை 200 கிலோ இருந்தது.












Click it and Unblock the Notifications