இலங்கையிலிருந்து மீண்ட 19 தமிழக மீனவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:இலங்கை சிறையில் கடந்த 3 மாதங்களாக தவித்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 19 மீனவர்கள் அங்கிருந்துவிடுவிக்கப்பட்டு விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலமுருகன், ராமசாமி, பாக்கியம் உள்ளிட்ட 19 மீனவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம்மீன் பிடிக்க கடலுக்குள் சென்றனர். அப்போது அவர்கள் சென்ற படகுகள், கடலில் வீசிய பலத்த காற்றால் திசைமாறி இலங்கைப் பகுதிக்குள் சென்று விட்டது.

அவர்களை இலங்கைக் கடற்படையினர் பிடித்துக் கைது செய்தனர். 19 பேரும் பின்னர் இலங்கை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை மீட்கக் கோரி அவர்களது குடும்பத்தினருக்குஅரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மூலம்இவர்களை மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 19 பேரும் விடுதலைசெய்யப்பட்டனர்.

19 மீனவர்களும் நேற்று விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். பின்னர் அவர்களின் சொந்தஊர்களுக்கு பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+