பரவும் சிக்குன்குனியா: தவிக்கும் யாழ். தமிழர்கள்
யாழ்ப்பாணம்:இலங்கை அரசின் அறிவிக்கப்படாத பொருளாதார தடையால் தவித்துக் கொண்டிருக்கும் யாழ்ப்பாணம்தமிழர்கள் தற்போது சிக்குன்குனியா காய்ச்சலினால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடிவிட்டது. இதனால் அங்கு சாலைப் போக்குவரத்து முடங்கிக் கிடக்கிறது. உணவு, மருந்துப் பொருட்களின்பற்றாக்குறையால் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் லட்சக்கணக்கான தமிழர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பட்டினிச் சாவுகளும் அங்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கிடைக்கும் பொருட்களின் விலையும் கடுமையாகஉயர்ந்திருப்பதால், அவற்றை வாங்க முடியாமல் தமிழர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், தற்போது சிக்குன்குனியா காய்ச்சல் படு வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே டெங்கு வந்துபோய் விட்டது. அதிலிருந்து மீள்வதற்குள் சிக்குன்குனியா பரவி வருவதால் தமிழர்கள் சொல்லொணாத்துயரத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து தேசிய தொற்று நோய் தடுப்புத் துறை இயக்குநர் அபயசிங்கே கூறுகையில், கல்முனை, புத்தளம்,மன்னார், மட்டக்களப்பு உள்ளிட்ட பல பகுதிகளில் சிக்குன்குனியாக வேகமாக பரவி வருகிறது.
ஆனால் பறவைக் காய்ச்சல் பரவவில்லை. தற்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில்பெரும்பாலானவர்களுக்கு சிக்குன்குனியா வந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
யாழ்ப்பாணம் குறித்து அபயசிங்கே எதுவும் கூறவில்லை என்றாலும் கூட யாழ் வளைகுடாவுக்கான சுகாதாரப்பணிகள் இயக்குநர் கேதீஸ்வரன், யாழ்ப்பாணத்திலும் சிக்குன்குனியா வேகமாக பரவி வருவதாக கூறியுள்ளார்.
இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதுவரை உயிரிழப்பு குறித்து தகவல் இல்லை. ஆனால் ஒரு பெண் சிக்குன்குனியாவுக்கு இறந்துள்ளதாககூறப்படுகிறது.
இதற்குத் தேவையான மருந்து, மாத்திரைகள் கிடைப்பதில் பெரும் சிரமம் இருப்பதால் சிக்குன்குனியாவால்பாதிக்கப்பட்ட தமிழர்கள் கடும் அவதிக்காளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications