இன்று பிரபாகரன் உரை: டென்ஷனில் இலங்கை
கொழும்பு:மாவீரர் தினத்தையொட்டி விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் இன்றுநிகழ்த்தவுள்ள முக்கிய உரையில் என்ன இடம் பெறப் போகிறது என்று இலங்கைமுழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புலிகள் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்ற அச்சத்தால் இலங்கை முழுவதும் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் நவம்பர் 27ம் தேதியை மாவீரர் தினமாக கொண்டாடுவது விடுதலைப்புலிகளின் வழக்கம். அதற்கு முந்தைய தினம் பிரபாகரனின் பிறந்த தினமாகும். அந்தவகையில் நேற்று பிரபாகரனுக்கு 52வது பிறந்த நாள் ஆகும்.
மாவீரர் தினம் மற்றும் தனது பிறந்தநாளையொட்டி புலிகளின் வானொலி மற்றும்தொலைக்காட்சி மூலம் சிறப்பு உரை நிகழ்த்துவார் பிரபாகரன். இந்த உரைக்குஇலங்கைத் தமிழர்கள் மத்தியிலும், உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தமிழர்கள்மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவும்.
காரணம், பிரபாகரனின் உரையில், புலிகளின் திட்டங்கள், கொள்கைகள் குறித்துபிரபாகரன் விரிவாக விளக்குவார். அந்த வகையில், நாளைய பிரபாகரனின் உரையும்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தை, அதிகரித்து வரும் இலங்கைப்படையினரின் தாக்குதல்கள், யாழ்ப்பாணம் சாலை மூடப்பட்டதால் அங்குநெருக்கடிக்கு ஆளாகியுள்ள தமிழர்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு முக்கியபிரச்சினைகள் குறித்து பிரபாகரன் பேசுவார் எனத் தெரிகிறது.
அதேசமயம், இலங்கை படையினர் மீது போர் தொடுப்பது குறித்து பிரபாகரன்முக்கியமாக எதையும் குறிப்பிட மாட்டார் என்று ஒரு தரப்பு எதிர்பார்க்கிறது. அதேநேரத்தில், அமைதிப் பேச்சுக்கு மேலும் சில புதிய நிபந்தனைகளை புலிகள் விதிக்கக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை படையினரின் மனித உரிமை மீறல் செயல்களை பிரபாகரன் விரிவாகவிளக்கிக் கூறி, தமிழர்கள் சந்தித்து வரும் பல்வேறு நெருக்கடிகளை பிரபாகரன்விளக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாகரன் பேச்சில் என்னென்ன இடம் பெறக் கூடும் என்பது குறித்த எதிர்பார்ப்புஇலங்கை முழுவதும் எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிரபாகரன் ஆற்றிய உரையில்,புதிய அதிபராக ராஜபக்ஷே பதவியேற்றுள்ளார். அவருக்கு சிறிது கால அவகாசம்கொடுப்போம். தமிழர்களுக்கு அவர் நீதி வழங்குவாரா என்பதைப் பொறுத்திருந்துபார்ப்போம் என்று கூறியிருந்தார் பிரபாகரன்.
இந்த முறை பிரபாகரன் முக்கிய உரை நிகழ்த்தும்போது ராஜபக்ஷே இலங்கையில்இருக்க மாட்டார். அவர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, ராணுவத்திற்கு எதிராகவும், சிங்களர்களுக்கு எதிராகவும் விடுதலைப்புலிகள் பெரிய அளவிலான தாக்குதலை தொடங்கக் கூடும் என்ற அச்சம் இலங்கைஅரசுத் தரப்பில் நிலவுகிறது.
இதையடுத்து இலங்கையின் தெற்குப் பகுதியில் பாதுகாப்பு பன்மடங்குபலப்படுத்தப்பட்டுள்ளது. தற்கொலைப் படைத் தாக்குதல்களை சமாளிக்கவும்தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
18,742 புலிகள் சாவு:
இந்த நிலையில், கடந்த 1982ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதி முதல் இந்த ஆண்டுநவம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் 18,742தொண்டர்கள் பலியாகியுள்ளதாக விடுதலைப் புலிகள் தரப்பில் வெளியிடப்பட்டசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1982ம் ஆண்டு முதல்தான் விடுதலைப் புலிகள், இலங்கை படையினரைஎதிர்த்து முழு வீச்சில் சண்டையில் குதித்தனர் என்பது நினைவிருக்கலாம். இந்தகாலகட்டத்தில் மொத்தம் 299 தற்கொலைப் படைத் தாக்குதல்களை புலிகள்மேற்கொண்டுள்ளனர். மேலும் பலியானவர்களில் 4065 பேர் பெண்கள். இந்த ஆண்டுமட்டும் மொத்தம் 818 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அந்த புள்ளிவிவரத்தில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications