ஓசூர் அருகே லாரி கவிழ்ந்து 18 பேர் பலி
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மலைச் சரிவில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் அதில் பயணம் செய்த 20 பேர்பரிதாபமாக பலியானார்கள்.
ஓசூர் அருகே உள்ள ஏரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 88 பேர், ஓகனேக்கலில் நடந்த ஈமச் சடங்கு நிகழ்ச்சியில்கலந்து கொள்வதற்காக லாரி ஒன்றில் சென்றனர். ஈமச் சடங்கை முடித்து விட்டு அஞ்செட்டியில் உள்ளகத்திரிப்பள்ளம் என்ற காட்டுப் பகுதி வழியாக ஊருக்குத் திரும்பினர்.
அஞ்செட்டி, மலைப் பாங்கான வனப் பகுதியாகும். அப்பாதையில் லாரி வந்து கொண்டிருந்தபோது பெரியபாறையில் மோதி பள்ளத்தில் உருண்டது. இதில் லாரியில் பயணித்த 18 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவஇடத்திலேயே பலியாயினர். 60 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் ஓசூர் மற்றும் அஞ்செட்டியில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்தில் பலியான 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.
மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ்பாபு, காவல்துறைக் கண்காணிப்பாளர் தேன்மொழி உள்ளிட்டோர் அங்குவிரைந்து சென்று மீட்புப் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிதியுதவி:
இதற்கிடையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த முதல்வர்கருணாநிதி உயிரிழந்த 18 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.50,000 நிதியுதவியும், படுகாயம் அடைந்துபெங்களூரூரில் சிகிச்சை பெற்று வரும் 16 பேருக்கு தலா 35,000 சிகிச்சை உதவியாகவும், ஓசூர் மற்றும்அஞ்செட்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 54 பேரின் குடும்பங்களுகு தலா ரூ.15,000 நிதியுதவிவழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications