வீடிழந்தவர்களுக்கு இலவச நிலம், நிதியுதவி
சென்னை:சென்னை போரூர் ஏரியை ஆக்கிரமித்து குடியிருந்து வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா ரூ. 2000 நிதியுதவிமற்றும் இலவச நிலம் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
சென்னை அருகே போரூரில் உள்ள ஏரியை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. ஏரிக்கு வரும்தண்ணீர் இதனால் தடைபட்டு ஊர்களுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
தற்போது ஏரி நிரம்பியுள்ளதால் ஏரிக்குள் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால்ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகளை அதிகாரிகள் இடித்துத் தள்ளி வருகின்றனர்.
4வது நாளாக இன்றும் வீடுகள் இடிப்பு தொடருகிறது. இதனால் வீடுகளை இழந்தவர்கள் தங்களதுபொருட்களுடன் ஏரிக் கரையில் குழுமியுள்ளனர். அவர்களுக்கு இலவச நிலம், ரூ. 2000 நிதியுதவியும்வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி தற்போது அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், போரூர் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்துகட்டப்பட்டுள்ள வீடுகளை அரசு அகற்றுவதை நிறுத்த வேண்டும் என சில செய்தித் தாள்களில் வந்துள்ளசெய்தியை முதல்வர் கருணாநிதி, தலைமைச் செயலகத்திற்கு காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர்களையும், தலைமைச் செயலாளர், பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை செயலாளர்களையும்,சம்பந்தப்பட்ட பிற அதிகாரிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தினார்.
போரூர் ஏரியின் உபரி நீர் அடையாறு ஆற்றுக்கு வரும் வழி இந்தக் குடிசைகளால் தடுக்கப்பட்டிருந்தது. இதன்காரணமாக அதற்கு அருகே உள்ள முகலிவாக்கம், மவுலி வாக்கம், மணப்பாக்கம், போரூர் ஆகிய பகுதிகளில்வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்தக் குடிசைகளையெல்லாம் அகற்ற வேண்டும் என்று நீதிமன்றத்தில்தனியாரால் வழக்கு தொடரப்பட்டு, தீர்ப்பில் அவர்களையெல்லாம் உடனடியாக அகற்ற வேண்டும் எனதெரிவிக்கப்பட்டிருந்தது.
போரூர் ஏரியை சில தனிப்பட்ட நபர்கள் ஆக்கிரமித்து அங்கே பல வீடுகளைக் கட்டி பொதுமக்களை ஏமாற்றிவாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்த வருகிற தகவலும் அரசுக்குக் கிடைத்தது.
அப்படிப்பட்டவர்கள்தான் இதுபோன்ற குடிசைகளை அகற்றுவதற்கான முயற்சியில் அரசு ஈடுபடும்போது ஏழை,எளிய மக்களை தூண்டி விட்டு எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்கிறார்கள்.
தற்போது போரூர் ஏரியில் பொது நல நோக்கத்துடனும், நீதிமன்ற ஆணையின் பேரிலும், குடிசைகளைஅகற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுகின்றபோது, அங்கே வாழ்வோருக்கு வேறு இடத்தில் வீடு கட்டிக் கொள்ளஅரசே இடத்தை தேர்ந்தெடுத்து இலவசமாக கட்டிக் கொடுக்கவும் முன்வந்துள்ளது.
இதுகுறித்து முதல்வர் விவாதித்தபோது, உண்மையில் ஏழைகளாக இருந்து, அங்கிருந்து அகற்றப்படும் ஏழை,எளிய மக்களுக்கு புதிய இடங்களில் அவர்கள் உடனடியாக வீடுகளை கட்டிக் கொள்ள ரூ. 2000 வரைஇலவசமாக நிதியுதவியும் அரசு சார்பில அளிக்கலாம் என்று அறிவித்துள்ளார்.
அவர்கள் வீடு கட்டிக் கொள்ளும்போது அந்தப் பகுதிகளில் தேவைப்படும் அடிப்படை வசதிகளும் அரசுசெலவிலேயே செய்து கொடுக்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications