செக்ஸ் தொல்லை-மாணவர் குறை கேட்க போன்
சென்னை:பள்ளி மாணவ, மாணவியர் தங்களது குறைகளைத் தெரிவிக்க தனிப் பிரிவு ஒன்றை மாநில பள்ளிக் கல்விஇயக்குநரகம் தொடங்கியுள்ளது. இதற்கென தனி தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளிக் கூடங்களில் மாணவ, மாணவியர் பல்வேறு இன்னல்களுக்குஆளாவது அதிகரித்து வருகிறது. மாணவிகளாக இருந்தால், ஆசிரியர்களால் பாலியல் தொல்லைகளுக்குஆளாவதும், மாணவர்களாக இருந்தால் ஆசிரியர்களின் சரமாரி அடி உதைகளால் காயமடைவதும் தொடர்ந்துவருகிறது.
சமீபகாலமாக இந்த சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உச்சகட்டமாக சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த ஒருபள்ளியின் மாணவிகள் ஒட்டுமொத்தமாக ஒரு ஆசிரியர் மீது பாலியல் புகார் கூறியது பெரும் பரபரப்பைஏற்படுத்தியது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த ஆசிரியருக்கு ஆதரவாக ஒரு ஆசிரியை பரிந்துபேசியதுதான்.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் நலன் குறித்த நடவடிக்கைகள் குறித்து கடந்த வாரம்பள்ளிக் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதைத் தொடர்ந்து தற்போது மாணவ, மாணவியருக்காக தனி குறை தீர்ப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.இதற்கென தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள மாணவ, மாணவியர்தங்களது குறைகளை இந்த தொலைபேசி எண் மூலம் தெரிவிக்கலாம்.
குறை தீர்ப்புப் பிரிவு கண்காணிப்பு அதிகாரியாக பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநர் ராஜராஜேஸ்வரிநியமிக்கப்பட்டுள்ளார். இவரைத் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண் 044-28273591 ஆகும்.
இதுகுறித்து ராஜராஜேஸ்வரி கூறுகையில், பள்ளி நிர்வாகம், ஆசிரிய, ஆசிரியைகள், தலைமை ஆசிரியர்கள்உள்ளிட்டோர் தொடர்பான தங்களது குறைகளை மாணவ, மாணவியர் இந்தத் தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். தினசரி வரும் புகார்களைப் பரிசீலித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
தொலைபேசியில் புகார் தெரிவிக்க முடியாதவர்கள் என்னை நேரில் அணுகியோ அல்லது தபால் மூலமோதங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். புகாருக்கு ஆளாபவர்கள் மீது தவறு இருப்பது தெரிய வந்தால் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பல்வேறு பிரச்சினைகளை மாணவ, மாணவியர்கள் சந்தித்தாலும் கூட அவற்றை வெளியே சொல்வதற்குப் பயந்துகொண்டு அவற்றை சொல்லாமலேயே விட்டு விடுகின்றனர். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகி தற்கொலைஉள்ளிட்ட முடிவுகளுக்குப் போய் விடுகிறார்கள்.
இதைத் தடுக்கும் வகையில் தற்போது குறை தீர்ப்புப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரிவு குறித்து அனைத்துமாணவ, மாணவியருக்கும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் தெரிவிக்கப்படவுள்ளது. பத்திரிகைகளில் விளம்பரம்செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவைத் தவிர மாவட்டந்தோறும், முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் மாவட்ட குறை தீர்ப்புபிரிவை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் ராஜராஜேஸ்வரி.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications