தமிழர்களை கேவலப்படுத்திய அய்யர்: திருமா
சென்னை:சிங்கள ஹிட்லர் ராஜபக்ஷேவை தனது மகள் திருமணத்திற்கு அழைத்து, ராஜமரியாதை கொடுத்ததன் மூலம் ஒட்டுமொத்த தமிழர்களையும் மத்திய அமைச்சர்மணிசங்கர அய்யர் கேவலப்படுத்தி விட்டார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்திருமாவளவன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
அப்பாவித் தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்று குவித்து வரும் சிங்களஹிட்லர் ராஜபக்ஷேவை இந்திய அரசு வரவேற்கக் கூடாது என்று தமிழக மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்தும், அதனை பொருட்படுத்தாமல் இந்திய அமைச்சர்கள்ராஜபக்ஷேவை வரவேற்றிருப்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒட்டு மொத்ததமிழர்களையும் இந்திய அரசு அவமதித்து விட்டது.
அத்தோடு, தமிழ்நாட்டைச் சேர்ந்த மணிசங்கர அய்யர் தனது இல்லத் திருமணத்திற்குஅவரை அழைத்து, வாக்களித்த மக்களையும் ஒட்டுமொத்த தமிழர்களையும்கேவலப்படுத்தியிருக்கிறார்.
ஈழத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கைறயும், ஈடுபாடும்கொண்டுள்ள தமிழக முதல்வர் கருணாநிதி சிங்கள, இந்திய அரசுகளின் தமிழினஅழிப்பு முயற்சிகளைத் தடுத்திட விரைந்து முயற்சிக்க வேண்டும்.
இதுதொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட முதல்வர்நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.
அய்யருக்கு எதிராக சிறுத்தைகள் போராட்டம்:
இதற்கிடையே, ராஜபக்ஷேவை தனது மகள் திருமணத்திற்கு வரவழைத்த மத்தியஅமைச்சர் மணிசங்கர அய்யரைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில்சென்னையில் இன்று போராட்டம் நடந்தது.
கட்சியின் மாநில இணைச் செயலாளர் விடுதலைச் செழியன் தலைமையில் நடந்தஇந்தப் போராட்டத்தின்போது அய்யரின் கொடும்பாவியை தீ வைத்துக் கொளுத்தினர்.இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து சென்று விடுதலை செழியன்உள்ளிட்டோரைக் கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications