டெல்லியில் வைகோ உண்ணாவிரதம்:மேனன், நாராயணன் தமிழர் விரோதிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:இலங்கை அரசுக்கு ஆதரவாக வெளியுறவு செயலாளர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்எம்.கே.நாராயணன் ஆகியோர் செயல்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வந்துள்ளார். அவரது வருகையை எதிர்த்து தமிழகம் முழுவதும் பல்வேறுஅரசியல் கட்சியினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம், தர்ணா, உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களைமேற்கொண்டனர்.

Vaiko
இந்த நிலையில் மதிமுக சார்பில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. பொதுச் செயலாளர்வைகோ தலைமையிலான இந்தப் போராட்டத்தில் அக்கட்சியின் எம்.பிக்கள் மற்றும் 1000க்கும் மேற்பட்டதொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

உண்ணாவிரதம் இருந்த வைகோவை முன்னாள் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, அகாலி தளம் கட்சியின்தலைவர் சுக்தேவ் சிங் தின்சா ஆகியோர் சந்தித்து வாழ்த்தும், ஆதரவும் தெரிவித்தனர்.

முன்னதாக டெல்லியில் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வைகோ சந்தித்துப் பேசினார். சந்திப்புக்குப்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், இலங்கை அரசுடன், இந்தியா எந்தவிதமான ராணுவஒப்பந்த்ததையும் மேற்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்தால் அது தமிழர்களுக்கு பாதகமாக அமைந்து விடும்.

மேலும் இரு நாட்டுப் படைகளும் கடல் எல்லையை கூட்டாக கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ளக்கூடாது. இது இலங்கை, இந்தியாவுக்கு விரிக்கும் வலையாகும். இந்தப் பொறியில் இந்தியா சிக்கிக் கொள்ளக்கூடாது.

இலங்கைப் பிரச்சினையை சிக்கலாக்கும் பணியில் வெளியுறவு செயலாளர் மேனன், தேசிய பாதுகாப்புஆலோசகர் நாராயணன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பிரணாப் முகர்ஜியிடம் புகார்தெரிவித்துள்ளேன்.

இலங்கைக்கு சென்ற சிவசங்கர மேனன் அதிபர் ராஜபக்ஷேவிடம், இலங்கையில் வாழ்ந்த எனது நண்பர்கள் பலர்விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டு விட்டனர். இப்போது எனது நண்பர்களின் மனைவிகள் மட்டுமே உயிர்வாழ்கிறார்கள் என்று கூறியுள்ளார். தனது வரம்பை மீறி பேசியுள்ளார் மேனன். இது தவறான கருத்தாகும்.

அதேபோல தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.இருவரும் சேர்ந்து நிலைமையை மேலும் மோசமாக்கி வருகின்றனர்.

சிவசங்கர மேனன் எப்போது தமிழர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியதில்லை. அவர் கொழும்பில் தூதராகஇருக்கும்போதே, தமிழர் பிரதிநிதிகளை சந்திக்க மறுத்தவர். பிதரமரை சந்திப்பதற்காக இலங்கை தமிழ்எம்.பிக்கள் டெல்லிக்கு வந்தபோது பல நாட்கள் காத்திருந்து விட்டு கடைசியில் சந்திக்காமாலேயே அனுப்பிவைக்கப்பட்டனர்.

இலங்கைத் தமிழர்களின் விரோதியான டக்ளஸ் தேவானந்தாவை ஹவானவில் பிரதமர் மன்மோகன் சிங்குடன்கை குலுக்க வைத்தவர் நாராயணன். இவர்கள் இருவரும் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே நடவடிக்கைஎடுக்கின்றனர்.

இந்த அதிகாரிகள், இலங்கை அரசின் ஆசைகளையும், விருப்பங்களையும், நிறைவேற்றுவதில் மட்டுமே ஆர்வம்கொண்டுள்ளனர். அவர்கள்தான் பிதரமரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் தவறான தகவல்கள் மூலம்வழி நடத்துகிறார்கள்.

யாழ்ப்பாணத்தை இணைக்கும் ஏ9 சாலை இன்னும் திறக்கப்படவில்லை. ஆனால் திறக்கப்பட்டு விட்டதாக உலகசமுதாயத்தை ஏமாற்றி வருகிறது இலங்கை. நமது பிரதமருக்கும், வெளியுறவு அமைச்சருக்கும் கூட அப்படித்தான்கூறியுள்ளனர். பிரதமரை சில நாட்களுக்கு முன்பு சந்தித்தபோது கூட அப்படித்தான் அவர் என்னிடம்தெரிவித்தார்.பிரணாப் முகர்ஜியும் அதையேதான் கூறினார்.

ரத்தக்கறை படிந்த ராஜபக்ஷேவுடன் இந்திய அரசு கை குலுக்கக் கூடாது. இலங்கை அரசுக்கு எந்தவிதஉதவிகளையும் இந்தியா செய்யக் கூடாது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து கேரள அரசு நடக்க வேண்டும்.அணையின் உயர்த்த முடியாது என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறுவது பேச்சுவார்த்தையை பயனற்றதாகமாற்றும்.

முரசொலி மாறன், பெரியார் போன்ற திராவிட இயக்க முன்னோடிகளின் வரிசையிலும் வர மாட்டார், சிறந்தபார்லிமென்டேரியன் என்ற வகையில் சிலை வைக்கப்படுகிறது என்றாலும், எண்ணற்றோர் சிலைகளையும்வைத்தாக வேண்டும். அதற்கு தனி மியூசியமே போட்டாக வேண்டும்.

பெரிய தலைவர் என்றால் ராஜாஜி, சி.எஸ். ஆகியோரது சிலைகளையும் வைத்தாக வேண்டும். எனவே தங்களதுஅரசியல் செல்வாக்கை, குடும்ப நலனுக்காக திமுக தவறாக பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுஉண்மையாகியுள்ளது என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+