சிறுமியை வதைத்த சைகோ பெண் கைது

Subscribe to Oneindia Tamil

சேலம்:சேலம் மாவட்டம் ஆத்தூரில் தத்தெடுத்து வளர்த்து வந்த 5 வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்தபேய்க்குணம் படைத்த பெண்ணை போலீஸார் கைது செய்து சிறுமியை மீட்டனர்.

ஆத்தூர் உடையார் பாளையம் அய்யாவு உடையார் தெருவைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி. இவர் கிருஷ்ணகிரிமாவட்டம் மத்திகிரி ஆனந்த ஆசிரமத்திலிருந்து வீணா என்ற 5 வயது சிறுமியை தத்தெடுத்து வளர்த்து வந்தார்.

ஆனால் மகளாக நினைத்து வளர்க்காமல் தனது தனிப்பட்ட கொடூர புத்திக்கு வடிகாலாக வீணாவை புவனேஸ்வரிபயன்படுத்தி மிகக் கொடூரமான முறையில் சித்திரவதை செய்து வந்தது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.

சிறுமி வீணாவை உடல் ரீதியாக மிகக் கொடூரமாக சித்திரவதை செய்துள்ளார் புவனேஸ்வரி. அந்தக் குழந்தையின்உடலெங்கும் 200க்கும் மேற்பட்ட இடங்களில் சூடு போட்டும், பிளேடால் அறுத்தும் காயப்படுத்தியுள்ளார் இந்தகிராதகி.

இதுதொடர்பாக போலீஸாருக்குப் புகார்கள் வரவே புவனேஸ்வரி வீட்டுக்கு விரைந்து சென்ற போலீஸார் அந்தப்பாதகியை கைது செய்து குழந்தையை மீட்டுள்ளனர்.

புவனேஸ்வரி சிறு வயதில் மிக அழகாக இருப்பாராம். கிளாமராக உடை அணிந்து கொள்வது இவருக்குப்பிடித்தமான ஒன்று. கல்யாணத்திற்குப் பிறகும் தனது கிளாமர் பழக்கத்தை இவர் கைவிடாததால் கணவர் பிரிந்துசென்று விட்டார்.அதன் பின்னர் தறி கெட்டு ஓட ஆரம்பித்தார் புவனேஸ்வரி.

தனது மகள் தேவியை சேலத்தில் உள்ள பள்ளியில் விடுதியில் சேர்த்து படிக்க வைத்தார். மறுபக்கம்பணக்காரர்களின் நட்பை சம்பாதித்துக் கொண்டு அவர்களுக்கு சின்ன வீடாக மாறினார். இப்படி பலபணக்காரர்களின் ஆசை நாயகியாக இருந்துள்ளாராம் புவனேஸ்வரி. அவர்கள் மூலம் கிடைத்த பணம், நகை,வீடுகளுடன் படு ஆடம்பரமாக வாழ்ந்துள்ளார்.

இந்த நிலையில் மகள் தேவி வளர்ந்து கல்லூரிப் படிப்புக்குப் போனார். அங்கு ஒருவரைக் காதலித்து திருமணம்செய்து கொண்டார். அத்தோடு இல்லாமல், தனது தாயிடமிருந்து தனது சொத்துக்களைப் பிரித்துக் கொடுக்கவும்வலியுறுத்தினார்.

மகள் தன் இஷ்டத்திற்கு நடந்து கொள்ள ஆரம்பித்ததால் கடும் ஏமாற்றமடைந்தார் புவனேஸ்வரி. அவரைப்பழிவாங்கத்தான் வீணாவை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார். தனது மகள் நினைவு வரும்போதெல்லாம் மதுஅருந்திவிட்டு, அப்பாவி வீணாவை சித்திரவதை செய்வாராம்.

உடல் முழுவதும் பிளேடால் கீறி அவரை அழ வைத்து வேடிக்கை பார்ப்பாராம். ரத்தம் பொங்க பொங்க அந்தக்குழந்தை துடிப்பதைப் பார்த்து தேவியே துடிப்பதாக நினைத்துக் கொள்வாராம் இந்த சைக்கோ புவனேஸ்வரி.

புவனேஸ்வரி வீட்டிலேயே கலைச்செல்வி என்ற பெண்ணும் இருந்துள்ளார். அவரும், புவனேஸ்வரியும் அடிக்கடிஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவார்களாம். தாயாக இருந்து பார்க்க வேண்டிய புவனேஸ்வரி கொடூர வில்லியாகமாறி சித்திரவதை செய்து வந்ததால் வீணாவின் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வந்தது.

வீணாவின் அலறல் சப்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் மத்திகிரி ஆசிரமத்திற்குத் தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து ஆசிரம நிர்வாகிகள் விரைந்து வந்தனர். வீணாவின் நிலையைப் பார்த்து கலங்கிப் போன அவர்கள்உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர், காவல்துறை அதிகாரிகளுக்குப் புகார் கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்தே புவனேஸ்வரி வீட்டை சோதனையிட்ட அதிகாரிகள் அவரைக் கைது செய்து குழந்தையைமீட்டனர். தற்போது வீணா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளாள். மிகவும் பரிதாபகமாக உடல்முழுவதும் ரத்தக்காயத்துடன் வீணாவைப் பார்க்கும் யாருக்குமே இதயம் வெடித்து விடும். அந்த அளவுக்கு சித்திரவதைக்குஆளாகியுள்ளாள்வீணா.

கைது செய்யப்பட்டுள்ள புவனேஸ்வரி மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்சேலம் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+